பிளாஸ்டிக் கேனில் இருந்து தண்ணீர் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் பிரச்சனை என்ன?

Plastic Water Bottle: பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பதால் உடலில் பல கோளாறுகள் ஏற்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 12, 2024, 06:27 PM IST
  • பலர் பிளாஸ்டிக் கேனில் இருந்து தண்ணீர் குடிப்பர்
  • இதனால் உடலில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன
  • அவை என்னென்ன தெரியுமா?
பிளாஸ்டிக் கேனில் இருந்து தண்ணீர் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் பிரச்சனை என்ன? title=

Plastic Water Bottle Effects In Tamil: சொம்பில் தண்ணீர் குடிப்பது, பானையில் தண்ணீர் குடிக்கும் காலம் எல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. பொட்டிக்கடையில் இருந்து, மால்களில் இருக்கும் விளை உயர்ந்த கடைகள் வரை அனைத்து இடங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்துக்கொள்ள பலர் முயற்சி செய்தாலும் சில சமயங்களில் அதனை தவிர்க்க முடியாமல் போகலாம். 

சிலர், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை உபயோகிப்பதால் சமயங்களில் மிகவும் குற்ற உணர்வுடன் இருப்பர். அப்படி நீங்களும் உணர்பவராக இருந்தால், பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களில் இருந்து தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொண்டு உடனே அதன் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ளுங்கள். 

பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களில் இருக்கும்  பாக்டீரியாக்கள்:

மைக்ரோபிளாஸ்டிக்ஸ், 5 மில்லிமீட்டருக்கும் குறைவான சிறிய துகள்களாகும் இருக்கும். இது, தண்ணீரில் பல வகைகளில் பாக்டீரியாக்களாக கலந்து விடும். மைக்ரோ ஃபைபர்ஸ், பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் துண்டுகள் ஆகியவை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரில் கலக்கும். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் கடல் நீரில் காணப்படும் பாக்டீரியாக்களும், குப்பை துகள்களும் கூட, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் காணப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சரியாக அகற்றவில்லை என்றால், அதன் தாக்கம் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்கணுமா? உடனே பப்பாளியை இப்படி சாப்பிடுங்க போதும்

மைக்ரோ பிளாஸ்டிக்குகளால் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்?

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீரைப் பருகும்போது, மைக்ரோபிளாஸ்டிக் திரவத்தை நம்மை அறியாமலேயே உட்கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள தண்ணீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதனால் பரவலாக காற்றும் தண்ணீரும் மாசுபடுகின்றன. மாசுபாட்டின் இந்த சாத்தியமான சுகாதார தாக்கங்கள் எதிர்காலம் குறித்த கவலையினை எழுப்புகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தோல் பொருட்கள் போன்றவற்றிலிருந்து பல்வேறு இரசாயனங்கள் நம் உடலுக்குள் ஊடுருவும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. 

இதனால் இன்சுலின் எதிர்ப்பு, எடை அதிகரிப்பு, உடல் நல ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தும் இந்த இரசாயனங்களுடன் தொடர்புடையவை. நீண்ட நாள் இது போன்ற மைக்ரோ பிளாஸ்டிக் உடலுக்குள் செல்வதால், அழற்சி, ஆக்சிஜன் அழுத்தம், இட்டுமொத்த உடல் நல ஆரோக்கியம் ஆகியவை பாதிக்கப்படும். 

பிளாஸ்டிக் தண்ணீர் கேன் பயன்பாட்டை எப்படி குறைப்பது?

>உபயோகித்த பிளாஸ்டிக் தண்ணீர் கேனை மீண்டும் உபயோகிக்கலாம்.
>துருப்பிடிக்காத ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை உபயோகிக்கலாம்.
>கிளாஸ், பிபிஏ ஃப்ரே பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் அருந்தலாம். 
>தண்ணீரை ஃபில்டர் செய்யும் வடிக்கட்டும் இயந்திரங்களை இன்ஸ்டால் செய்யலாம்.
>பிளாஸ்டிக் தண்ணீரை குடிப்பதற்கு முன்பு, முடிந்தால் கொதிக்க வைத்து குடிக்கலாம். 

மேலும் படிக்க | என்றும் இளமைக்கு... அத்திப் பழ ஜூஸ் குடிங்க... டாப் 5 நன்மைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News