நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க, சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். இருப்பினும், நன்றாக சாப்பிடுவது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மட்டும் போதாது. மாறாக, இதனுடன் மேலும் பல விஷயங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது ஆரோக்கியமாக இருக்க மிகவும் முக்கியம். காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதும் அப்படிப்பட்ட ஒரு பழக்கம். கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், ஆரோக்கியத்திற்கு பல சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும் என்பது மிகவும் வருத்தமான விஷயம். தண்ணீரை அதிகம் சூடாக்கிய பிறகுதான் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை, வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலமும் அதன் பலன்களைப் பெறலாம். இந்தக் கட்டுரையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியமும் தண்ணீரும்
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்படுகிறது. உடல் உள் உறுப்புகள் சுத்தமடைந்து, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதன் மூலம் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான உடலைப் பெறலாம்.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது
உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் அகற்றுவது அவசியம். உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுவது முற்றிலும் நின்றுவிட்டால், நாம் நோய்வாய்ப்பட ஆரம்பிக்கிறோம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் இருந்து அழுக்குகள் அல்லது நச்சுகள் தானாகவே வெளியேறி ஆரோக்கியமாக இருக்கும். வெறும் வயிற்றில் வெதுவெதுபான நீர் குடிப்பது உடலை செலவு ஏதும் இன்றி டீடாக்ஸ் செய்யும் மிகவும் பயனுள்ள வழியாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | இந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும்
வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது
நமது உடலுக்கு வளர்சிதை மாற்ற செயல்முறை மிகவும் முக்கியமானது. இது நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்பட்ட ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுகிறது. மோசமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். இதன் காரணமாக பெரும்பாலும் நாள் முழுவதும் பலவீனமாகவும் சோம்பலாகவும் உணர்கிறார்கள். தினமும் வெந்நீரை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும்
நல்ல உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், உங்கள் செரிமானம் சரியாக இருப்பதும் முக்கியம். உங்கள் செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை என்றால், நல்ல உணவு கூட உங்களை தொந்தரவு செய்யலாம். எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். தினமும் வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இயற்கையாகவே உங்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதோடு, மற்ற தோல் நோய்களின் அபாயமும் வெகுவாகக் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உடலுக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. நீங்கள் சொந்தமாக எதையும் திட்டமிடுவதற்கு முன், உங்கள் உடலின் தன்மையை புரிந்துக் கொண்டு முயற்சிக்கவும். உணவியல் நிபுணர் இதற்கு சரியான ஆலோசனை சொல்ல முடியும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ