கொத்தமல்லி நீர்: எடை இழப்பு முதல் அசிடிட்டி வரை.. அசத்தலான வீட்டு வைத்தியம்

Health Benefits of Coriander Water: தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடித்து வந்தால், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 3, 2023, 01:18 PM IST
  • கொத்தமல்லி நீர் பருகுவதால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள்.
  • அமிலத்தன்மையில் நன்மை பயக்கும்.
  • கொத்தமல்லி தண்ணீர் குடித்தால், உடல் எடையை குறைப்பதில் அதிக நன்மை கிடைக்கும்.
கொத்தமல்லி நீர்: எடை இழப்பு முதல் அசிடிட்டி வரை.. அசத்தலான வீட்டு வைத்தியம் title=

Health Tips: நமது அன்றாட சமையலில் தனியா, அதாவது மல்லி விதைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அதன் வாசனை உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. நாம் சமைக்கும் பல வகையான உணவுகளில் கொத்தமல்லி விதைகள் மற்றும் இலைகள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இலை மற்றும் விதைகள் மட்டுமல்லாமல் கொத்தமல்லி தண்ணீரும் பல வித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாக உள்ளது. உடல்நலம் தொடர்பான சில சிறிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு தனியா தண்ணீர் நல்ல தீர்வாக பயன்படும். 

கொத்தமல்லி நீரால் கிடைக்கும் ஆரோக்கியத்திற்கான நன்மைகள் (Health Benefits of Coriander Water): 

தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் (Coriander Water) குடித்து வந்தால், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கொத்தமல்லி ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. கொத்தமல்லி இலை மற்றும் விதை இரண்டும் அனைவருக்கும் பல வித நன்மைகளை அளிக்கவல்லவை. காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடித்து வந்தால், செரிமானம் மேம்படும். மேலும், இதனால் எடையும் கட்டுக்குள் இருக்கும். 

கொத்தமல்லி நீர் பருகுவதால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் பற்றி இங்கே காணலாம்

1. அமிலத்தன்மையில் நன்மை பயக்கும் (Home Remedy For Acidity)

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லி தண்ணீரை அருந்த வேண்டும். கொத்தமல்லி விதையில் உள்ள பண்புகள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால் அசிடிட்டி பிரச்சனை குறையும். கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவு குறைந்து எரியும் உணர்வு மற்றும் வலி ஏற்படாது. கொத்தமல்லி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, இது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமலும் காக்கிறது. 

மேலும் படிக்க | தொப்பை கரைய, எடை குறைய... இந்த பானங்களை குடித்தால் போதும்

2. எடை இழப்பு (Home Remedy For Weight Loss)

கொத்தமல்லி தண்ணீர் குடித்தால், உடல் எடையை குறைப்பதில் அதிக நன்மை கிடைக்கும். எடை இழப்புக்கு இது ஒரு முக்கியமான தீர்வாகும். கொத்தமல்லி விதைகள் மற்றும் இலைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் இதை உட்கொண்டால் வயிற்றுக்கு நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வு கிடைக்கும். மேலும் கொத்தமல்லி விதைகள் கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றன. 

3. தோலுக்கு நன்மை பயக்கும் (Home Remedy for Skin Care)

கொத்தமல்லி நீர் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பது சரும பாதுகாப்பிற்கு  உகந்தது. இது உங்கள் முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் புள்ளிகளை நீக்குகிறது.

4. நீரிழிவு நோய் (Home Remedy For Diabetes)

நீரிழிவு நோய் இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. சர்க்கரை அளவை குறைப்பதில் (Sugar Control) மல்லி விதைகளின் நன்மைகளைப் பெற, இரவில் ஒரு கைப்பிடி விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் விதைகளை வடிகட்டி தண்ணீர் குடிக்கவும். சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், கொத்தமல்லி விதை நீரை தொடர்ந்து குடிக்கலாம். இந்த நீர் இரத்த குளுக்கோஸைக் குறைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த நீரின் நுகர்வு LDL ஐக் குறைத்து HDL ஐ அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆரோக்கியமான அழகுக்கு உத்தரவாதம் அளிக்கும் பூ எது? பட்டிமன்றத்தில் ஜெயிப்பது செம்பருத்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News