Health News: உங்கள் குழந்தை Super Star ஆக ஜொலிக்க உணவில் சேருங்கள் Omega-3!!

Omega-3 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களாகும். அவை மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் பெரிய பங்கு வகிக்கின்றன. அவை புதிய கலங்களை உருவாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2021, 09:30 PM IST
  • ஒரு மனிதனின் வாழ்நாளுக்கான ஆரோக்கியம் அவரது குழந்தைப் பருவத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
  • ஒமேகா -3 குழந்தைகளுக்கு நேரடியாக கிடைக்க, குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வது அவசியம்.
  • பிறப்பு முதல் 18 வயது வரை, குழந்தைகளுக்கு வெவ்வேறு அளவுகளில் ஒமேகா -3 தேவைப்படுகிறது.
Health News: உங்கள் குழந்தை Super Star ஆக ஜொலிக்க உணவில் சேருங்கள் Omega-3!!  title=

குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்று ஊட்டச்சத்தாகும். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எனினும், இதை முக்கிய விஷயமாகக் கருதி, அரசாங்கங்கள், சுகாதார நிறுவனங்கள், உலகெங்கிலும் உள்ள குடிமக்கள், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களின் தேவை, அவற்றின் சரியான அளவு மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிகள் ஆகியவை குறித்து சரியான விழிப்புணர்வு இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியமாகும்.

வைட்டமின் சி, டி போன்ற பல வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பற்றி அதிகம் பேசப்பட்டாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து (Healthy Food) குறித்து அதிக கவனம் செலுத்தப்படவில்லை. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா -3 பற்றி அறிவது மிகவும் முக்கியமாகும். பல ஊட்டச்சத்து ஆதாரங்களில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எவற்றையெல்லாம் வழங்க முடியும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ALSO READ: Health News: வயிற்றுக் கொழுப்பை நீக்க உங்களுக்கு உதவும் இந்த எளிய tips!!

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஒமேகா -3 இன் முக்கியத்துவம்

Omega-3 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களாகும். அவை மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் பெரிய பங்கு வகிக்கின்றன. அவை புதிய கலங்களை உருவாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். கூடுதலாக, அவை மத்திய நரம்பு மண்டலம் மற்றும் இருதய அமைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதிலும், கண்களின் செயல்பாட்டிற்கு உதவுவதிலும் அவற்றின் பங்கு அதிகம் உள்ளது.

ஆராய்ச்சியின் படி, ஒமேகா-3, உளவியல் மற்றும் ஒருவரது நடவத்தை நிலைமைகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒமேகா -3 இன் அழற்சி எதிர்ப்பு ஆற்றல் உடல் பருமன் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கான தீர்விலும் உதவுகிறது. உடல் பருமன் மற்றும் ஆஸ்துமா ஆகிய இரண்டு பிரச்சனைகளுமே இந்நாட்களில் குழந்தைகளிடையே அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் உணவில் ஒமேகா -3

பிறப்பு முதல் 18 வயது வரை, குழந்தைகளுக்கு வெவ்வேறு அளவுகளில் ஒமேகா -3 தேவைப்படுகிறது. உதாரணமாக, பிறப்பு முதல் 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தினமும் 0.5 கிராம் ஒமேகா -3 தேவைப்படுகிறது. 14 முதல் 18 வயதுடைய ஒரு பெண் குழந்தைக்கு தினமும் 1.1 கிராம் ஒமேகா -3 சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படும். அதே வயது ஆண் குழந்தைகளுக்கு 1.6 கிராம் ஒமேகா -3 தேவைப்படுகிறது.

ஒமேகா -3 குழந்தைகளுக்கு நேரடியாக கிடைக்க, குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வது சரியாக இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தினசரி உணவில் சால்மன், மத்தி மீன், இறால், ஹில்சா மீன் போன்ற கடல் உணவுகளையும் இறைச்சியையும் சேர்க்க வேண்டும். அசைவம் உண்ணாதவர்கள் ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயாபீன்ஸ் மற்றும் சியா விதைகளை கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும்.

ஒரு மனிதனின் வாழ்நாளுக்கான ஆரோக்கியம் அவரது குழந்தைப் பருவத்தில் தீர்மானிக்கப்படுகிறது. உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி (Immunity), உறுதியான உடல் என இவை அனைத்திலும் அதிக அளவு பங்களிப்பை அளிக்கும் ஒமேகா-3-ஐ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவில் சரியான சமயத்தில் சரியான அளவில் சேர்ப்பது அவர்களது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான நல்ல அடித்தளமாக அமையும் என்று கூறினால் அது மிகையல்ல!!

ALSO READ: Health Tip: காலையில் வெறும் வயிற்றில் எள் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News