மாறி வரும் வாழ்க்கை முறையால் மாரடைப்பு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதியவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய நோய் தாக்கிய காலம் மலையேறி விட்டது. இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க சிறந்த உணவுடன், உங்கள் பழக்கத்தையும் மாற்ற வேண்டும். எனவே இதய நோய்கள் வரமால தடுப்பதற்கும், இதய் நோய்கள் ஏதேனும் இருந்தால், மருந்துகளின்றி எவ்வாறு குணப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
1. காலை நடைப்பயிற்சி
முதலில் காலை நடை பயிற்சி செய்வதை உங்கள் அன்றாட பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மாரடைப்பு அபாயம் குறையும்.
2. மன அழுத்தம், டென்ஷன் கூடாது
டென்ஷன், மன அழுத்தம் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக டென்ஷன் எடுத்துக் கொள்ளக் கூடாது. மன அழுத்தத்தைக் குறைக்க, உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்களுடன் வாரத்திற்கு ஒரு முறையாக சிறிது நேரம் கழிக்கவும். இது தவிர, உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் வேலையில் ஈடுபடுங்கள். இசையில் ஆர்வம் என்றால், மனதிற்கு இதமான இசையை தினமும் கேளுங்கள்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
3. உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் . உண்மையில், பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உங்கள் செல்களை இறக்காமல் பாதுகாக்கின்றன, இது நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
4. உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்
நட்ஸ் சாப்பிடுவதன் மூலமும் இதயத்தைப் பாதுகாக்கலாம். உண்மையில், நட்ஸ் வகை பருப்புகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது.
5. நல்ல தூக்கம்
இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க நல்ல தூக்கமும் அவசியம். 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இரவு 10 மணிக்குப் பிறகு தூங்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் தூங்கும் நேரமும் மிகவும் முக்கியமானது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ