Heart Disease: இதய நோயிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் ‘4’ டிப்ஸ்..!!

இந்தியவில், இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் இந்தியா இதய நோய்களின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 1, 2022, 03:31 PM IST
  • இதய ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 4 வழிமுறைகள்.
  • இதய நோய்க்கான மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசிக்கவும்.
Heart Disease: இதய நோயிலிருந்து உங்களை பாதுகாக்க  உதவும் ‘4’ டிப்ஸ்..!! title=

இந்தியவில், இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் இந்தியா இதய நோய்களின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில், இதய நோய்கள் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. உங்களுக்கு ஏற்கனவே இதய தமனி நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

இதய ஆரோக்கியத்தில் கவனம் தேவை

இதய நோயாளிகள் பெரும்பாலும் அதிக ட்ரைகிளிசரைடுகள், அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுடன் இருதய நோய் நிபுணர்களிடம் வருகிறார்கள், இதன் காரணமாக, சில சமயங்களில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை கூட உண்டாகிறது.

இந்த பிரச்சனைகளுடன் வரும் பெரும்பாலான மக்கள், உடல் பயிற்சி ஏதும் செய்யாதிருப்பவர்களாகவும், மன அழுத்தத்தில் உள்ளவர்களாகவும், அதிக எடை உள்ளவர்களாகவும் இருப்பதைக் காணலாம். இதன் காரணமாக இதய நோய் தொடர்பான  பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆரம்பத்தில், இந்த உடல்நலப் பிரச்சினைகள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் படிப்படியாக அவை இதயத் தமனிகளை சேதப்படுத்தத் தொடங்குகின்றன.

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்

1. ஆரோக்கியமான வாழ்க்கை முறை

ஒரு இதய நோயாளி ஆரோக்கியமான, சீரான வாழ்க்கை முறையை பராமரிப்பது மிகவும் முக்கியம். மருத்துவர் பரிந்துரைத்தபடி வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், நீங்கலாகவே எந்த புதிய உடற்பயிற்சியையும் செய்ய முயற்சிக்காதீர்கள். வாக்கிங் செல்லலாம். குறைந்தது 30 நிமிடங்களாவது உடல் பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உங்கள் உணவில் குறைந்த கொழுப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சிக்கன் மற்றும் கடல் உணவுகளை உண்ணலாம். புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் உட்கொள்ளலாம். இது தவிர, உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.

2. மருத்துவரின் ஆலோசனை

இதய நோயாளிகள் இருதயநோய் நிபுணரின் ஆலோசனையை அவசியம் பெற வேண்டும். மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்குச் செல்ல முடியாவிட்டால், ஆன்லைன்  மூலம் மருத்துவ ஆலோசனை செய்யும் வசதி உள்ளதை பயன்படுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் இப்போது ஆன்லைன் ஆலோசனை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பு மூலம் நோயாளியின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!

3. மருந்துகளை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்

எந்த நிலையிலும், உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்வதை நிறுத்தக்கூடாது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள எப்போதும் இதனை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாகவே எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளத் தொடங்காதீர்கள். இளைஞர்கள் தங்கள் லிப்பிட் பிரொபைலை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும்.

4.  பரிசோதனை

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டாலோ அல்லது பிபி, கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடு மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, நீங்கள் மருத்துவரிடம் சென்று தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்  என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது, உடல் பருமன் கொலஸ்டிரால் அதிக உள்ளவர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் தயவுசெய்து மருத்துவரை ஆலோசனை செய்யவும்.)

மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News