Happy Herbs: ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மகிழ்ச்சிக்கும் காரணமாகும் மூலிகைகள்

Herbs for Happy: ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது மனநிலையிலும் மூலிகைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? மூலிகைகளின் பண்புகள் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு கொண்டவை. இது மனநிலை மற்றும் அறிவாற்றலையும் பாதிப்பவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2022, 09:06 PM IST
  • மனதை மகிழ்ச்சியாக வைக்கும் மூலிகைகள்
  • ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது மனநிலையிலும் மூலிகைகள் தாக்கத்தை ஏற்படுத்தும்
  • மூலிகைகளின் பண்புகள் அழற்சி எதிர்ப்பு கொண்டவை
Happy Herbs: ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மகிழ்ச்சிக்கும் காரணமாகும் மூலிகைகள் title=

புதுடெல்லி: மூலிகைகள் உணவில் கூடுதல் சுவை மற்றும் நறுமணத்திற்காக சேர்க்கப்படுகிறது. மூலிகைகள் அவற்றின் பல நன்மைகளுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது மனநிலையிலும் மூலிகைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? மூலிகைகளின் பண்புகள் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு கொண்டவை. இது மனநிலை மற்றும் அறிவாற்றலையும் பாதிக்கும். நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தவும் உதவும். மூலிகைகள் குறிப்பாக செரோடோனின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்களின் சுரப்பை இயற்கையாக அதிகரிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  உணவு அல்லது பானத்தில் மூலிகைகளை சேர்த்து பலன் அடையலாம்.

மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்கும் மூலிகைகளில் சிறந்த ஐந்து மூலிகைகள்

அஸ்வகந்தா
அஸ்வகந்தா ஒரு மூலிகையாகும், இது உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது. அஸ்வக்ந்தாவை தொடர்ந்து பயன்படுத்துவது, உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும். குறிப்பாக அஸ்வகந்தாவின் இந்த பண்பு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு உதவுகிறது.  

மேலும் படிக்க | பணத்தை அள்ளிக் கொடுக்கும் அஞ்சலறைப் பொருள்! இப்படி பயன்படுத்தினால் கோடீஸ்வரி தான்

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை மூளையைத் தூண்டக்கூடியது. நினைவாற்றலுக்கும், நிதானத்திற்கும் காரணமாகும் லவங்கம், மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்களை உருவாக்கும்.
 
துளசி
துளசி மிகவும் பிரபலமான மூலிகை, இது வேத காலம் தொட்டே பயன்பாட்டில் உள்ளது. இது மனநிலையை மேம்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் சமாளிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியத்திற்கு உதவும் துளசி மனதில் ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க | கண்களில் ஏற்படும் இந்த 3 மாற்றங்கள் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைக் குறிக்கும்

கெமோமில்
கெமோமில் அதன் அமைதியான பண்புகளுக்கு முக்கியமாக அறியப்படுகிறது. இது ஒரு ஆயுர்வேத மருந்தாகவும், தூக்க சுழற்சியை சீராக்கவும் பயன்படுகிறது. மன அழுத்தத்தை போக்க உதவும் இது, வீக்கத்திற்கு உதவுகிறது. இந்த குறிப்பிட்ட மூலிகையை உட்கொள்வதற்கான சிறந்த வழி கெமோமில் தேநீர் ஆகும்.

வெந்தயம்
இது குளிரூட்டும் ஆற்றலையும்  மற்றும் அஸ்ட்ரிஜென்ட் மெட்டபாலிக் முடிவு விளைவையும் கொண்டுள்ளது. இந்த குளிரூட்டும் பண்பும்,  மன அழுத்தத்தை குறைக்கும் பண்பும் மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், உடலில்  மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுவதிலும் வெந்தயம் உதவுகிறது.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News