அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியா? இதையெல்லாம் உணவில் சேருங்க

Tips to Reduce High Cholesterol:உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2022, 05:07 PM IST
  • கொத்தமல்லி விதை (தனியா) தண்ணீரைக் குடிப்பதால் அதிக கொலஸ்ட்ரால் குறைந்து, உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
  • மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • காய்கறிகளை சமைக்கும்போது மஞ்சளை தினமும் உபயோகிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியா? இதையெல்லாம் உணவில் சேருங்க  title=

Tips to Reduce High Cholesterol: உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது உடலுக்கு நல்லதாக கருதப்படுவதில்லை. கொழுப்பு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கும் இது வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்துகளை சிலர் எடுத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இவற்றை உணவில் சேர்க்கலாம்

ஓட்ஸ், அரிசி, பழங்கள், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, பட்டாணி, தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கரையக்கூடிய நார்ச்சத்து இவற்றில் ஏராளமாக உள்ளது. இது அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனுடன், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

தனியா

கொத்தமல்லி விதை (தனியா) தண்ணீரைக் குடிப்பதால் அதிக கொலஸ்ட்ரால் குறைந்து, உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதற்கு கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு முழுவதும் ஆற வைக்கவும். காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இவ்வாறு செய்வதால் நன்மைகள் உண்டாகும்.

மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம் 

மஞ்சள்

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காய்கறிகளை சமைக்கும்போது மஞ்சளை தினமும் உபயோகிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது தவிர இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் சேர்த்து பருகலாம். இதுவும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

ஆளி விதை

ஆளிவிதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனுடன், அவை தமனிகளின் வீக்கத்தையும் குறைக்கின்றன. ஆளி விதையை முழுவதுமாகவோ அல்லது அரைத்தோ பாலுடன் பொடியாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் 30 கிராம் ஆளி விதையை உட்கொள்ள வேண்டும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு கப் க்ரீன் டீ கண்டிப்பாக பருக வேண்டும். இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த மற்ற வழிகள்

ஆரோக்கியமான உணவுகளைத் தவிர, பல வழிகளில் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இதைச் செய்ய, உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

1. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
2. வழக்கமான உடற்பயிற்சி
3. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
4. எடையை அதிகரிக்காமல் பாத்துக்கொள்ளவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News