இளைஞர்களிடம் பரவி வரும் புதுவகை போதை கலாச்சாரம்!

மதுபோதை, கஞ்சாபோதையினை தோற்கடிக்கும் வகையில் இந்தோனேஷியாவில் புதுவகை போதை வஸ்த்து ஒன்று பிரபலமாகி வருகிறது!

Last Updated : Nov 18, 2018, 07:30 PM IST
இளைஞர்களிடம் பரவி வரும் புதுவகை போதை கலாச்சாரம்! title=

மதுபோதை, கஞ்சாபோதையினை தோற்கடிக்கும் வகையில் இந்தோனேஷியாவில் புதுவகை போதை வஸ்த்து ஒன்று பிரபலமாகி வருகிறது!

போதை மோகம் அதிகம் கொண்ட இந்தோனேஷிய இளைஞர்கள் தற்போது Sanitary pad-களை கொண்டு புதுவகை போதை அனுபவித்து வருகின்றனர். 

Sanitary pad-களை வெந்நீரில் மூழ்கவைத்து, சிறிது நேரம் கொதிக்கவைத்து பின்னர் அந்த வெந்நீரினை குடிப்பதினால் போதை வஸ்த்துக்கள் தரும் போதையினை காட்டிலும் அதிக போதை அடையளாம் என்பது இந்தோனேஷிய இளைஞர்களின் நம்பிக்கை. இதற்கு இவர்கள் பயன்படுத்தும் Sanitary pad-கள் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்படாதது என்ற பேதம் இல்லை!...

இதுகுறித்து உள்ளூர் இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில்... Sanitary pad-களை பிறித்து வெந்நீரில் கொதிக்கவைத்து பின்னர் அந்த நீரினை குடித்தால் காற்றில் பறப்பது போன்று இருக்கும். விலைமிக்க மதுபானங்களை தேடி செல்வதற்கு பதிலாக இந்த இளிய முறையினை பயன்படுத்தி இளைஞர்கள் மகிழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Sanitary pad-களில் sodium polyacrylate என்னும் வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் ஆனது திரவங்களை உறுஞ்சும் தன்மை கொண்டது, இதனை வெந்நீரில் இடுகையில் வேதிமாற்றம் நிகழ்ந்து போதை வஸ்தாக மாறுகிறது என மருத்துவர்கள் தெரிவிகின்றனர். எனினும் இந்த வேதிப்பொருளை உட்கொள்கையில் நரம்பு தளர்ச்சி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தோனேஷியாவில் பிரபலமாகி வரும் இந்த கலாச்சாரத்தினை ஒழிக்க இந்தோனேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையம் (KPAI), பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது என தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Trending News