உருளைக் கிழங்கு உடலுக்கு நல்லதா? இத முதல்ல படிங்க..!

உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான் என்கிறது புள்ளிவிபரம்.

Last Updated : Jan 17, 2018, 02:04 PM IST
உருளைக் கிழங்கு உடலுக்கு நல்லதா? இத முதல்ல படிங்க..! title=

உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

எல்லா நாட்டிலும், எத்தகைய தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் உருளைக்கிழங்கு இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் தினசரி உணவிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்தப் உருளைக்கிழங்கை நம்மால் பார்க்க முடியும்.

100 கிராம் உருளைக்கிழங்கில் 75 கலோரிகள் உள்ளது. இந்த உருளைக் கிழங்கில் உள்ள கலோரியானது 1 கப் ஆரஞ்சு ஜூஸை விட குறைவானது. கொழுப்பு குறைவான தயிரை இந்த டயட்டில் சாப்பிடுவதால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான டாக்ஸின்கள் மற்றும் கெட்டக் கொழுப்புகளை அகற்றுகிறது

இதுதவிர வைட்டமின் சி 17 மில்லி கிராமமும், கால்ஷியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லி கிராமும், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாஷியம் ஆகியவையும் இதிலுள்ளன.

உருளைக்கிழங்கைப் வெந்நீரில் அரைத்தும் சாறு பிழிந்தும் காயத்துக்கும், தீச்சுட்ட புண்களுக்கும், மேற்பூச்சாகப் பூசலாம். இதில் கருச்சத்தும், கஞ்சிப் பசையும் அதிகம் இருப்பதால் உடலுக்கு பலத்தையும், கொழுப்பையும் கொடுக்கும். எனினும் சர்க்கரையையும் உண்டு பண்ணும் வாய்ப்பு இருப்பதால் அளவு தாண்டி பயன்படுத்தக் கூடாது.

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம்.

உருளைக்கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து, இரண்டு கண்களின் மேலும் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணாமல் போகும்.

வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களையும் உருளை போக்கக் கூடியது, மலச்சிக்கலை மறையச் செய்வது.உருளைக்கிழங்கின் தைலத்தை வெந்நீரில் கலந்து நசுக்குண்ட அல்லது வேறு ஏதேனும் வகையில் காயமுற்ற உறுப்புகளின் மேலாக ஒத்தடம் கொடுக்க குணம் உண்டாகும். 

உருக்கிழங்கு உன்னதமான மருத்துவ குணங்களை உடையது எனினும் விடாமல் பல நாட்கள் உபயோகப்படுத்துவதால் உடல் வலிவும் புத்தி வன்மையும் மந்தப்படும் என்பதை உணர்ந்து அளவோடு பயன்படுத்தல் வேண்டும்.

மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருப்பதால், அதனை அளவோடு உட்கொள்வது நல்லது.

Trending News