Heath Alert: டீயுடன் ‘சில’உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு!

பெரும்பாலான மக்கள் தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். சிலருக்கு காலையில் டீ கிடைக்காமல் போனால் தலைவலி வந்துவிடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 26, 2022, 09:20 AM IST
  • பெரும்பாலானோர் தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள்.
  • சிலருக்கு டீயுடன் முட்டை சாப்பிடுவது பிடிக்கும்.
  • தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Heath Alert: டீயுடன் ‘சில’உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு! title=

பெரும்பாலானோர் தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். சிலருக்கு காலையில் டீ கிடைக்காமல் போனால் தலைவலி வந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதற்கு அடுத்தபடியாக, அதிக அளவில் மக்கள் டீ பருகுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற நிலை கூட சில சமயம் ஏற்படுகிறது. அதிலும் பெரும்பாலானோர், தேநீருடன் ஏதாவது நொறுக்கு தீனிகள் அல்லது பிஸ்கட் சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். எனினும், தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..

முட்டை

சிலருக்கு டீயுடன் முட்டை சாப்பிடுவது பிடிக்கும். இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் தேயிலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும் போது, ​​அமிலங்கள் புரோட்டீன் கலவைகளை உருவாக்கி மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் அபாயத்தை அதிகரிக்கும்.

இனிப்பு பிஸ்கட்

டீயுடன் இனிப்பு பிஸ்கட் சாப்பிடுவதையும் பெரும்பாலானோர் விரும்புவார்கள். தேநீருடன் இனிப்பு பிஸ்கட்களை உட்கொள்வது சர்க்கரையின் அளவை பெரிதும் அதிகரிக்கும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகனால், உடல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும். சர்க்கரை தொடர்ந்து கட்டுக்குள் இல்லை என்றால், சிறுநீரகம், கண் போன்ற சில உறுப்புகளும் பாதிக்கும். 

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

கடலை மாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்

மழைக்காலத்தில் டீயுடன் பகோடா பஜ்ஜி சாப்பிடுவது பிடிக்காது என யாராவது கூறுவார்களா என்ன... ஆனால் கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும்.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News