ரத்த புற்றுநோய் பற்றி அனைவரும் அறிந்துள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரத்த புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. இரத்த புற்றுநோய் தொடர்பான சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 14, 2021, 08:01 PM IST
ரத்த புற்றுநோய் பற்றி அனைவரும் அறிந்துள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!! title=

புற்றுநோயின் பெயரைக் கேட்டவுடனேயே நம் மனதில் ஒரு இனம் புரியாத அச்சம் பரவும். ஏனென்றால், புற்றுநோயை குணப்படுத்த முடியாத நோயாகவே நாம் கருதுகிறோம். அதிலும் இரத்தப் புற்றுநோய் குறித்த அச்சம் பலருக்கு உள்ளது. 

ஆனால் புற்றுநோய் பற்றிய தேவையான தகவல்கள், அதனை வரமால் தடுக்கும் முறைகளை  நாம் தெரிந்து வைத்திருந்தால், இந்த தீவிர நோய் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரத்த புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், இரத்த புற்றுநோய் தொடர்பான 7  முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 

இரத்த புற்றுநோய் தொடர்பான சில முக்கியமான  தகவல்கள்

1. இரத்த புற்றுநோய்க்கான சில முக்கிய காரணங்கள் வயது, புகையிலை, ஆல்கஹால்,  குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்தால் ஏற்படும் பரம்பரை நோய் மற்றும் ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் கதிர்வீச்சின் வெளிப்பாடு என மேதாந்தா மருத்துவமனை கூறுகிறது ஆகும்.

2. இரத்த புற்றுநோயை பொறுத்தவரை விஷயத்தில், ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உள்ள மூன்றாவது நாடு இந்தியா என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியாவை விட சீனா மற்றும் அமெரிக்காவில் அதிக பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3. லிம்போமா என்னும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் என்று மெடந்தா கூறுகிறது. இது 64 சதவீதமாக உள்ளது. 

ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

4 ஆரம்ப கட்டத்தில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால், எதிர்காலத்தில் இரத்த புற்றுநோயின் பாதிப்பு  30 சதவிகிதம் குறைக்கலாம் என்று மெதாந்தா கூறுகிறது.

5. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான தேசிய அறக்கட்டளையின் அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் இரத்த புற்றுநோயிலிருந்து மீண்டு வருபவர்களின் விகிதம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

6. மற்ற புற்று நோய்களை போல் ரத்த புற்றூ நோயை ஆரம்ப கட்டங்களில் கண்டறியும், புற்றுநோய் சோதனை இல்லை என 2020 செப்டம்பர்  மாதம் வெளியான புற்றுநோய் ஆராய்ச்சிக்கான தேசிய அறக்கட்டளை எழுதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்

7. எனினும், இந்த ஆபத்தான நோயை இரத்த புற்றுநோயின் சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம். உதாரணமாக, காய்ச்சல், குளிர், எப்போதும் சோர்வு மற்றும் பலவீனம், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி, திடீர் எடை இழப்பு, இரத்த சோகை, நிணநீர் கணுக்கள் , கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றில் போன்றவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் நீண்ட காலமாக உங்களுக்கு இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றானது இல்லை. இது  பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News