ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து சோர்வை நீக்கும் ‘சில’ உணவுகள்!

ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இரத்தத்தை, உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2023, 08:35 PM IST
  • ஹீமோகுளோபின் உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
  • ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் இருகக் வேண்டும்.
  • ஹீமோகுளோபின் குறைபாடு ரத்த சோகை என அறியப்படுகிறது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து சோர்வை நீக்கும் ‘சில’ உணவுகள்! title=

ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இரத்தத்தை, உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதமான ஹீமோகுளோபின்  ஒரு முக்கியமான புரதம்.  ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இரத்தத்தை, உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் இருகக் வேண்டும். ஹீமோகுளோபின் குறைபாடு ரத்த சோகை என அறியப்படுகிறது. இந்நிலையில், உடலுக்கு சோர்வைத் தரும் ரத்த சோகைக்கு மருந்தாகும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.  

பேரீச்சம்பழம்

இரும்பு மற்றும் வைட்டமின் சி கலவையை பேரீச்சம்பழம் மற்றும் திராட்சைகளில் காணலாம். அத்திப்பழம் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் சக்தியாக உள்ளது. உலர்ந்த அத்திப்பழங்கள், திராட்சைகள் மற்றும் பேரீச்சம்பழங்களை காலையில் சாப்பிடுவது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும். 

மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

கீரை

கீரை இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரம் இது ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது. சமைக்காத பச்சைக் கீரையில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது. இது இரும்புச் சத்தை உடலில் உறிஞ்சுவதைத் தடுக்கும். எனவே வேக வைத்த கீரையை தான் சாப்பிட வேண்டும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ப்ரோக்கோலி 

ப்ரோக்கோலி மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற பிற முக்கிய தாதுக்களின் நல்ல ஆதாரமாக இருப்பதுடன், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் உள்ளது. பச்சைக் காய்கறிகள் சத்தான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்டவை. இதன் விளைவாக, அவை எடையைக் குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.

மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்பு சத்து, மெக்னீசியம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் சி உள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களின் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கிறது.

முருங்கை இலை 

முருங்கை இலையில் துத்தநாகம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

கருப்பு எள் 

கருப்பு எள்ளில்,  இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள் பி6, E மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளது.  எள்ளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம். ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி உலர்ந்த அல்லது வறுத்த கருப்பு எள் விதைகளை கலந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உங்கள் உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்கலாம்.

( பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News