மன அழுத்தத்தைக் குறைக்க உணவுகளை தெரிந்துக்கொள்வோம்

Updated: Oct 11, 2017, 07:52 PM IST
மன அழுத்தத்தைக் குறைக்க உணவுகளை தெரிந்துக்கொள்வோம்

உணவு வகைகளிலேயே மன அழுத்தத்தைக் குறைப்பவையும் இருக்கின்றன. அவைகளை பற்றி குறிப்புகள் சில 

வாழைப்பழம் மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது. மன அழுத்தத்துக்கு நல்லது.

ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த்தூளைப் பாலில் சேர்த்து அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பது நல்லது.

மண்பானைத் தண்ணீரில் வெட்டிவேர் கலந்து அருந்துவதால் மன அழுத்தம் குறையும். 

ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை யாகும்.

உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் அருந்தால் நிம்மதியான தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும். 

மாதுளம்பழச் சாற்றை தினசரி அருந்தலாம் மன அழுத்தம் குறையும்.