Ways to Lose Belly Fat: 15 நாளில் தொப்பை மாயமாய் மறையும் அதிசயம்

Lose Belly Fat: தொப்பையை குறைக்க சில எளிய வழிகளை நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், அதைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கொழுப்பை ஈஸியாக குறைக்கலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 11, 2022, 10:17 AM IST
  • தொப்பையை குறைக்கும் வழிகள்
  • அதிக புரத உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்
  • நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடவும்
Ways to Lose Belly Fat: 15 நாளில் தொப்பை மாயமாய் மறையும் அதிசயம் title=

உடல் எடையை குறைக்க டிப்ஸ்: இன்றைய வாழக்கை முறையில் அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது மிகப்பெரிய சவாலாகி வருகிறது. பிஸியான வாழக்கை முறையின் காரணமாக நாம் சரியான உடற்பயிற்சியோ அல்லது சரியான உணவையோ எடுத்துக்கொள்ள முடிவதில்லை. வயிற்று கொழுப்பை அதிகரிப்பது நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சனைக்கான காரணம் நமது உணவுப் பழக்கம் மற்றும் வழக்கமான வாழ்க்கை முறையுடன் நேரடியாக தொடர்புடையது.

வயிற்றில் உள்ள கொழுப்பின் காரணமாக பலர் சிரமப்படுகின்றனர். உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி, வீட்டு வைத்தியம் போன்றவற்றை மக்கள் நாடுகிறார்கள். எனவே நம் உடலில் இருக்கும் தொப்பை கொழுப்பை குறைக்க 6 எளிய வழிகள் இருக்கிறது. இந்த முறைகள் அனைத்தும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை. ஆகையால் இதை பின்பற்றி உங்கள் தொப்பை கொழுப்பை 15 நாட்களில் குறைக்க முயற்சியுங்கள்.

மேலும் படிக்க | ஆரோக்கிய நன்மை அதிகமாக உள்ள ஐஸ் டீ

தொப்பையை குறைக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

1. ​சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்கவும் - சர்க்கரை மற்றும் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் எடை அதிகரிக்க காரணமாகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், சர்க்கரை மற்றும் சர்க்கரை பானங்களிலிருந்து விலகி இருக்கத் தொடங்குங்கள். சர்க்கரை சேர்க்கப்படுவது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

2. அதிக புரத உணவுகளை சாப்பிடுங்கள் - எடை இழப்புக்கு புரதம் ஒரு முக்கிய பங்காகும். நீங்கள் தொப்பை கொழுப்பால் சிரமம் படுகிறீர்களானால் உங்கள் தினசரி உணவில் புரதம் நிறைந்த உணவுகளின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். அதிக அளவு புரதத்தை உட்கொள்வதால், தொடர்ந்து சாப்பிடும் ஆசையும் பெருமளவு குறைகிறது மற்றும் வயிறு எப்போதும் நிரம்பியதாக உணர செய்யும்.

3. குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள் - உங்கள் உணவில் வழக்கத்தை விட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளைச் எடுத்துக்கொள்ளுங்கள். குறைந்த கார்ப் உணவை உட்கொள்வதன் மூலம், அதன் விளைவு விரைவில் உடலில் தெரியவரும்.

மேலும் படிக்க | Weight Loss with Food: இந்த உணவுகளை சாப்பிட்டால் ஒல்லியாகலாம்: எடை குறைப்பு டிப்ஸ்

4. நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள் - வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக அளவு நார்ச்சத்து உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், எடை இழப்பில் எந்த வகையான நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

5. தினசரி உடற்பயிற்சி கட்டாயம் - உங்கள் எடையை குறைக்க, உடற்பயிற்சி செய்வதும் மிகவும் அவசியமாகும். பொதுவாக நாம் உணவில் கட்டுப்பாடு செய்வோம் ஆனால் உடற்பயிற்சி செய்வத்தில், ஆனால் நீங்கள் உங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் வயிற்றுப் பயிற்சிகளைச் சேர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும்  படிக்க | Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News