தொப்பை கொழுப்பை கரைக்க, எடையை குறைக்க... முருங்கையை இப்படி சாப்பிடுங்க, வேகமா குறையும்

Weight Loss Tips: முருங்கை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் அது எடை இழப்பு முயற்சியிலும் வெகுவாக உதவும் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2023, 06:24 AM IST
  • முருங்கையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
  • ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் தாவர கலவைகள் ஆகியவையும் இதில் அதிகம் காணப்படுகின்றன.
  • கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த முருங்கை கீல்வாதம் மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு நல்லது.
தொப்பை கொழுப்பை கரைக்க, எடையை குறைக்க... முருங்கையை இப்படி சாப்பிடுங்க, வேகமா குறையும் title=

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது  உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. உடல் எடையை குறைக்க பல வித வீட்டு வைத்தியங்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

முருங்கையின் நன்மைகள் (Health Benefits of Moringa):

முருங்கையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தவிர, ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் தாவர கலவைகள் ஆகியவையும் இதில் அதிகம் காணப்படுகின்றன. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த முருங்கை கீல்வாதம் மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு நல்லது.

இதுமட்டுமின்றி, முருங்கைக்காயில் உள்ள ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் கலவைகள் தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கின்றன.

ஒரு கப் அல்லது 21 கிராம் முருங்கையில் இருக்கும் நன்மைகள்: 

புரதம்: 2 கிராம்
வைட்டமின் B6: 20%
வைட்டமின் சி: 11%
இரும்பு: 10%
ரிபோஃப்ளேவின் (B2): 11%
வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்): 9%
மெக்னீசியம்: 8%

முருங்கைக்காய், முருங்கை இலை என முருங்கையின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் அது எடை இழப்பு (Weight Loss) முயற்சியிலும் வெகுவாக உதவும் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. உடல் எடையை குறைப்பதில் முருங்கையின் பயன்பாட்டை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க உதவும் முருங்கை (Weight Loss With Moringa):

உடல் எடையை குறைக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) முயற்சிப்பவர்களுக்கு முருங்கை நன்மை பயக்கும். விலங்குகள் மீது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், முருங்கை உடலில் கொழுப்பு உருவாவதைக் குறைத்து, கொழுப்புச் சிதைவை மேம்படுத்தும் என்பதைக் காட்டுகின்றன. முருங்கை இலைகளிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | ஒல்லியான உடல் வாகை பெற... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ தானியங்களுக்கு மாறுங்க!

முருங்கை, மஞ்சள் மற்றும் பிற காய்கள் ஆகியவற்றைக் கொண்ட 900 மில்லிகிராம் சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டவர்கள் 10.6 பவுண்டுகள் வரை எடையை இழந்துள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முருங்கை இலைகள், காய்கள் மற்றும் விதைகளில் காணப்படும் முக்கிய அழற்சி எதிர்ப்பு சேர்மங்களான ஐசோதியோசயனேட்டுகளும் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எடை இழப்புக்கு முருங்கையை எவ்வாறு பயன்படுத்துவது

முருங்கை தேநீர்

முருங்கையை டீயாகவும் உட்கொள்ளலாம். இலவங்கப்பட்டை அல்லது துளசி போன்ற மூலிகைகளுடன் முருங்கை இலைகளை (Moringa Leaves) வேகவைக்கலாம். இது இயற்கையாகவே காஃபின் இல்லாதது, எனவே நீங்கள் அதை இரவு தூங்கும் முன் அல்லது காலையில் குடிக்கலாம்.

தூள் வடிவில்

முருங்கை இலை தூள் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் சுவை கசப்பாகவும், சற்று இனிப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. உங்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க, ஷேக்ஸ், ஸ்மோத்திகள் மற்றும் தயிர் ஆகியவற்றில் முருங்கை இலை தூளை எளிதாக சேர்க்கலாம்.

மேலும் படிக்க | அறிவாற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ‘8’ விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News