Nexletol: மாரடைப்படை தடுக்கும் புதிய கொலஸ்ட்ரால் மருந்து நெக்ஸ்லாடோல்!

கடந்த சில காலங்களாக இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமல்லாது எல்லா வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்கு இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்படும் போது இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2023, 06:31 PM IST
  • ஸ்டேடின்கள் என்பது கொழுப்பைக் குறைக்கப் பயன்படும் இரசாயனங்களின் ஒரு குழு.
  • புதிய மருந்து மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது
  • நெக்ஸ்லெட்டால் கொலஸ்ட்ரால் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
Nexletol: மாரடைப்படை தடுக்கும் புதிய கொலஸ்ட்ரால் மருந்து நெக்ஸ்லாடோல்! title=

தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இன்று பெரும்பாலான மக்கள் இதயம் தொடர்பான நோய்களை எதிர்கொள்கின்றனர். கடந்த சில காலங்களாக இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமல்லாது எல்லா வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்கு இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்படும் போது இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்நிலையில், ஒரு புதிய மருந்து மாரடைப்பு அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மருந்து இதய நோய்க்கு சிறத தீர்வை அளிக்கிறது என ஒரு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Nexletol பற்றி ஆராய்ச்சியாளர்கள்

புதிய மருந்து மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனுடன், அதிக கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இந்த மருந்தின் விளைவு ஒரு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருந்தின் பெயர் Nexletol. கொலஸ்ட்ராலுக்கு ஏற்கனவே பல மருந்துகள் உள்ளன. இதில் ஸ்டேடின்களும் அடங்கும். ஆனால் இது ஸ்டேடின்களிலிருந்து வேறுபட்டது. ஸ்டேடின்கள் என்பது கொழுப்பைக் குறைக்கப் பயன்படும் இரசாயனங்களின் ஒரு குழு. இதனைப் பயன்படுத்துவதால் உடலில் சில பக்கவிளைவுகளும் காணப்படுகின்றன. புதிய மருந்து நெக்ஸ்லாடோல் இது ஸ்டேடின்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நெக்ஸ்லெட்டால் கொலஸ்ட்ரால் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

பக்க விளைவுகள் இல்லை

நெக்ஸ்லெட்டால் வேதியியல் ரீதியாக பெம்பெடோயிக் அமிலம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது ஒரு ஸ்டேடின் அல்ல. ஆனால் அது அதே வழியில் வேலை செய்கிறது. இது அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. ஸ்டேடின்களின் சில பக்கவிளைவுகளால், பலர் இந்த மருந்தை உட்கொள்வதில்லை. இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நெக்ஸ்லெட்டால் ஒரு சஞ்சீவி என நிரூபிக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் படிக்க | டயட் வேண்டாம்.. உடற்பயிற்சி வேண்டாம்... உடல் எடையை குறைக்க சூப்பரான வழிகள்!

தசை வலி இல்லை

ஒரு ஆய்வின்படி, 10 சதவிகிதம் அதிகமான கொலஸ்ட்ரால் நோயாளிகள் ஸ்டேடின் மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை. அதே நேரத்தில், சிலர் ஸ்டேடின்களை எடுத்துக்கொள்வதால் தசை வலி இருப்பதாக புகார் கூறுகின்றனர். இந்த புதிய மருந்தான நெக்ஸ்லெடோலை எடுத்துக்கொள்வதால் தசைகளில் எந்த வித வலியும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இதனுடன், கல்லீரலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதையும் தடுக்கிறது.

( பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | முதுகு வலிக்கு 'குட் பை' சொல்ல இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News