இதயம் முதல் எலும்புகள் வரை... பக்காவாக பாதுகாக்கும் காளான்..!!

சைவ உணவு, அசைவ உணவு என எந்த உணவு பிரியர்களுக்கும் விருப்ப உணவாக இருப்பது காளான். இது நீரிழிவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 22, 2024, 08:26 PM IST
  • காளான்கள் பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
  • காளான்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
  • காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
இதயம் முதல் எலும்புகள் வரை... பக்காவாக பாதுகாக்கும் காளான்..!! title=

காளான்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. மேலும், பல மருத்துவ பண்புகளும் காளானில் காணப்படுகின்றன. இது நீரிழிவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. காளான்களை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.

காளான்களில் உள்ள ஊட்டசத்துக்கள்

காளான் சத்துக்கள் நிறைந்தது. புரதம், வைட்டமின் ஏ, பி, சி டி, செலினியம், துத்தநாகம், நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் காளானில் ஏராளமாக உள்ளன. இது தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, நீரிழிவு மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் இதில் காணப்படுகின்றன, இது பல நோய்களிலிருந்து (Health Tips) உங்களைப் பாதுகாக்கிறது.

காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்: 

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாகிறது, எனவே அதை அதிகரிக்க, நமது உணவில் காளான்களை சேர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பி, சி தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காளானில் காணப்படுகின்றன. எனவே, இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் காளான்: 

நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை காளானில் காணப்படுகின்றன, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, பீட் க்ளூட்டன் என்ற தனிமம் இதில் உள்ளது, இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

எலும்புகளை வலுவாக்கும் காளான்: 

மூட்டுகளில் வலி அதிகமாக இருந்தால்அல்லது உங்கள் எலும்புகள் மிக பலவீனமாக இருந்தால், காளான்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி காளானில் அதிக அளவில் உள்ளது. இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க | முடி ரொம்ப கொட்டுதா கத்தையா வளர இந்த விதை மட்டும் போதும்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் காளான்:

ஒரு ஆராய்ச்சியின் படி, சில காளான்களில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

எடையைக் குறைப்பதில் திறம்பட செயல்படும் காளான்: 

நார்ச்சத்து தவிர, பாலிசாக்கரைடுகள், பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் போன்ற பல உயிரியல் கூறுகள் காளானில் காணப்படுகின்றன. இது, உடல் எடையை குறைப்பதோடு, உங்கள் இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

சைவ உணவு, அசைவ உணவு என எந்த உணவு பிரியர்களுக்கும் விருப்ப உணவாக இருப்பது காளான் என்பது குறிப்பிடத்தக்கது. காளான் பிரியாணி, காளான் வறுவல், காளான் குழம்பு, காளான் ரைஸ் என காளான்கள் விதவிதமாக சமைக்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி அசைவத்தை வைத்து பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுவது போல் சைவத்தில் காளான்களை வைத்து பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்க முடியும் என்பதால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் மேஜிக் காம்போ: இப்படி பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News