இதய நோய் முதல் மூட்டு வலி வரை... அருமருந்தாகும் நல்லெண்ணெய்!

தென்னிந்தியாவில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முதன்மையானது நல்லெண்ணெய்.  எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் இருக்கும் ஊட்டசத்துக்கள் ஏராளம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 19, 2023, 07:44 AM IST
  • புற்று நோய்க்கு எதிரான பண்புகளை கொண்ட நல்லெண்ணெய்
  • சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முதன்மையானது நல்லெண்ணெய்.
  • ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நல்லெண்ணெய்.
இதய நோய் முதல் மூட்டு வலி வரை... அருமருந்தாகும் நல்லெண்ணெய்! title=

தென்னிந்தியாவில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முதன்மையானது நல்லெண்ணெய். எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் இருக்கும் ஊட்டசத்துக்கள் ஏராளம். நல்லெண்ணெயில் வைட்டமின் E, B காம்ப்ளக்ஸ், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் யாவும் எலும்புகளை வலுப்படுத்தவும், முடியை பராமரிக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் உதவுகின்றன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நல்லெண்ணெய் வயதான தோற்றம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளின் விளைவுகளிலிருந்து உடலை பாதுகாக்கின்றன. 

1. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

உயர் இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எள் எண்ணெய் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். எள் எண்ணெயில் பல சிறப்பு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது. பல பொதுவான சமையல் எண்ணெய்கள் சர்க்கரையை அதிகரிக்கின்றன, அதே சமயம் எள் எண்ணெய் அதை குறைக்க உதவுகிறது.

2. கீல்வாதத்திலிருந்து பாதுகாக்கும் நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் உள்ள உணவு புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் எலும்புகளுக்கு வலிமையை தருகின்றன. மேலும், எள் எண்ணெயில் அதிக அளவு கால்சியம் உள்ளது, இது எலும்புகளை வலுவாக வைத்திருக்கும். உடலில் கால்சியம் இல்லாததால், மூட்டுவலி உட்பட பல எலும்பு தொடர்பான நோய்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. எள் எண்ணெயை சமையல் எண்ணெயாகச் சேர்ப்பது மூட்டுவலி போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். 

3. கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் சீசேமோல் என்ற பொருள் நிறைய உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது (Heart Health). இதனால் இதய நோயை வரமால தடுக்கிறது.எள் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். இது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். பல வகையான சாதாரண சமையல் எண்ணெய்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கத் தான் உதவுகின்றன. அதே சமயம் எள் எண்ணெயை உட்கொள்வதால் தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

4. சரும ஆரோக்கியதிற்கு நல்லெண்ணெய்

குளிர்காலத்தில் சரும வறட்சியை சமாளிக்க நல்லெண்ணெய் பெரிதும் உதவும். கை கால்களில் நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டால் சருமத்திற்கு தேவையான எண்ணெய் சத்து கிடைக்கும். தோலில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும். இது அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளதால், சருமத்தில் ஏற்படும் தொற்றுகளையும் தவிர்க்கலாம்.

5. புற்று நோய்க்கு எதிரான பண்புகளை கொண்ட நல்லெண்ணெய்

எள் விதைகளில் மிகுதியான ஆண்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் உள்ளன. இது நம் உடலில் புற்று நோய்க்கு எதிரான பண்புகளை உருவாக்கும். ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்கின்ற நல்லெண்ணெயை தவறாமல் உணவில் சேர்த்துக் கொண்டால், பலவிதமான நோய்களில் இருந்து உடலை பாதுகாத்து. ஆரோக்கியமாக வாழலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆயுர்வேதத்தின்படி சாப்பிட்ட பிறகு எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News