ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?

Omicron Symptoms: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் அறிகுறிகள் வெவ்வேறாக இருக்குமா? இது குறித்து உள்ள தகவல்கள் என்ன? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2022, 10:07 AM IST
  • ஓமிக்ரான் பற்றி நாளுக்கு நாள் பல வித செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
  • கோவிட் தடுப்பூசியின் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும்.
  • ஓமிக்ரான் மாறுபாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் அறிகுறிகள் வேறுபடும் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா? title=

Omicron Symptoms: உலக மக்களை கடந்த சுமார் இரு ஆண்டுகளாக பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்றும் இன்னும் நம்மை விட்டபாடில்லை. பல வித மாறுபாடுகளுடம் அது மீண்டும் மீண்டும் நம்மை தாக்கி வருகிறது. சமீபத்திய ஓமிக்ரான் மாறுபாடு அதன் அதி தீவிர பரவும் வேகத்தால் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓமிக்ரான் பற்றி நாளுக்கு நாள் பல வித செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஓமிக்ரான் அறிகுறிகள் (Omicron Symptom) குறித்து பல வித ஆய்வுகள் பல வித தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் அறிகுறிகள் வெவ்வேறாக இருக்குமா? இது குறித்து உள்ள தகவல்கள் என்ன? இதன் விவரத்தை இந்த பதிவில் காணலாம். 

பொதுவாக, கோவிட் தடுப்பூசியின் ஒன்று அல்லது இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும். இது பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன் எனப்படும். பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்ட நபர்களுக்கும் தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தென்படலாம். 

ஓமிக்ரான் மாறுபாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் அறிகுறிகள் வேறுபடும் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள். குறிப்பாக, அறிகுறிகளின் தீவிரத்தன்மையில் அதிக வித்தியாசம் காணப்படும். 

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கான அறிகுறிகள்

அறிக்கைகளின்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தலைவலி, மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் பிற பொதுவான அறிகுறிகள் இருக்கக்கூடும். 

ALSO READ | Omicron Alert: கண்கள் காட்டும் இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!!

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கான அறிகுறிகள்

தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற கடுமையான அறிகுறிகள் காணப்படலாம். 

தடுப்பூசி போடப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, ​​தடுப்பூசி போடப்படாதவர்களில் அறிகுறிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

தடுப்பூசி போடப்பட்டவர்களில் ஓமிக்ரான் அறிகுறிகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்றும், அவை ஆபத்தானவையாக இருக்காது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தடுப்பூசி போடாதவர்கள் 5 முதல் 6 நாட்களுக்கு அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஓமிக்ரான் ஏற்படுத்தும் குறிப்பிட்ட அறிகுறிகள் என்ன?

ஆய்வுகளின்படி, கொரோனா வைரஸின் மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ள ஓமிக்ரான் மாறுபாடு (Omicron Variant) மிகவும் லேசானது. தலைவலி, லேசான காய்ச்சல், அதிக உடல்வலி, தொண்டை அரிப்பு, பசியின்மை, இரவில் வியர்த்தல் மற்றும் வாந்தி போன்றவை ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர்களிடையே மிகவும் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. ஆனால் டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது வறட்டு இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு மற்றும் கடுமையான காய்ச்சல் போன்ற மற்ற அறிகுறிகள் ஓமிக்ரானில் குறைவாகவே காணப்படுகின்றன.

ALSO READ | Omicron புதிய அறிகுறிகள்: குணமடைந்தாலும் விடாது துரத்தும் பிரச்சனைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News