சிக்கன் மட்டனை விட பல மடங்கு ஊட்டச்சத்து மிக்க சைவ உணவு! பலாக்கொட்டைக்கு ஈடுஇணை இருக்கா?

Healthy Veg Protein : கோழி இறைச்சி மற்றும் முட்டையை விட 4 மடங்கு புரதம் நிறைந்துள்ள பலாக்கொட்டை, எலும்புகளை இரும்பு போல வலுவாக்குகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 13, 2024, 12:04 AM IST
  • பலாக்கொட்டையின் அற்புத ஊட்டச்சத்துக்கள்!
  • புரதத்தில் சிக்கனை விஞ்சும் பலாக்கொட்டை
  • புரதம் மிகுந்த சைவ உணவுகள்
சிக்கன் மட்டனை விட பல மடங்கு ஊட்டச்சத்து மிக்க சைவ உணவு! பலாக்கொட்டைக்கு ஈடுஇணை இருக்கா? title=

முக்கனிகளில் ஒன்று பலா என்பதும், அதன் சுவையும் மணமும் அனைவருக்கும் தெரியும். ஆனால், பலாப்பழத்திற்குள் இருக்கும் அதன் பலாக்கொட்டைக்குள் ஊட்டச்சத்து சுரங்கமே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக, பலாப்பழத்தை சாப்பிட்ட பின் அதன் கொட்டையை தூக்கி எறிந்துவிடுவார்கள். பலாப்பழ விதைகளில் உள்ள புரதம், அசைவ உணவுகளில் இருப்பதைவிட அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சைவ புரதத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்யும் புரதத்தைக் கொண்டிருக்கும் பலாக்கொட்டையை அடிக்கடி உட்கொள்வது எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும். பலாப்பழத்தில் புரதம் உடபட பல்வேறு ஊட்டத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, நமது தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை.

பலாப்பழ கொட்டையில் புரதம், வைட்டமின் ஏ, சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாப்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | மாதவிடாய் சுழற்சி பிரச்சனையா? ‘இந்த’ சிம்பிள் உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள்..

100 கிராம் பலாப்பழ விதையில் உள்ள சத்துக்கள் இவை..
புரதம் - 7.04 கிராம், ஃபைபர் - 1.5 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் - 38.9 கிராம், இரும்பு - 1.5 மி.கி மற்றும் சோடியம் - 63.2 மி.கி.

பலாக்கொட்டை எலும்புகள் வலுப்பெறும்
பலாப்பழ விதைகளை உட்கொள்வதன் மூலம் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தலாம். இதில் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் மெக்னீசியம் கணிசமான அளவில் உள்ளது. கால்சியத்தை உறிஞ்சும் திறன் அதிகமாக உள்ள பலாக்கொட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது எலும்புகள் வலுவாக இருக்கும்.  

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பலாக்கொட்டை 
பலாப்பழ விதைகளில் கணிசமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நமது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் பலாக்கொட்டை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே பலாக்கொட்டையை வழக்கமான உணவில் சேர்த்துக் கொண்டால் பல வகையான நோய்களில் இருந்து  பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | மணக்கும் ஏலக்காய் ஏற்படுத்தும் மோசமான பக்கவிளைவுகள்! நறுமண மசாலா பச்சை ஏலக்காய்!

நீரிழிவு எதிர்ப்புக்கு பலாக்கொட்டை 
பலாக்கொட்டையை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம். நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள பலாக்கொட்டை, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். பலாப்பழத்தில் இனிப்புத்தன்மை இருப்பதால் அது சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்றால், அதற்குள் இருக்கும் கொட்டை, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.  

பலாப்பழத்தின் கொட்டையை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதை உட்கொள்வதன் மூலம், எலும்புகளைப் பலப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 

இருந்தாலும், இதில் வாயுத்தன்மை அதிகமாக இருப்பதால், பலாக்கொட்டையை சமைக்கும்போது அதை வேகவைத்து வடித்து பின் சமைப்பது நல்லது. அதேபோல மாவுத்தன்மை அதிகம் கொண்டது பலாக்கொட்ட்டை என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெற்றிலை போட பிடிக்காதா? இப்படி பயன்படுத்தினா நோய்களே உங்களை நெருங்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News