இந்த 5 ஜூஸ் குடித்தால் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கலாம்

Homemade Juice for Burning Belly Fat: தொப்பை கொழுப்பை அதிகரிப்பது நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆளுமையையும் பாதிக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2022, 07:13 AM IST
  • தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி?
  • வீட்டில் ஜூஸ் தயார்
  • முடிவு விரைவில் தெரியும்
இந்த 5 ஜூஸ் குடித்தால் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கலாம் title=

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும் மக்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமன் நடுத்தர வயதினரை மட்டுமல்லாது இளைஞர்களையும் பாதிக்கிறது. உடற்பயிற்சி செய்தாலும், தொப்பை கொழுப்பு குறைவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய சில ஜூஸ்களை உட்கொள்ளவதன் மூலம் சுலபமாக குறுகிய காலக்கட்டத்தில் தொப்பையை குறைக்கலாம்.

தொப்பையை குறைக்க இந்த 5 அற்புத ஜூஸ்

1. மாதுளை ஜூஸ்
மாதுளை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் துத்தநாகம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஒமேகா-6 போன்ற பல சத்துக்கள் உள்ளன. இதில் உணவு நைட்ரேட்டுகள் உள்ளன, இது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் விளைவை அதிகரிக்க உதவும்.

மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள் 

2. பச்சை காய்கறிகளின் ஜூஸ்
நெல்லிக்காய், கீரை, கோஸ், ப்ரோக்கோலி, பாகற்காய் போன்ற உங்களுக்குப் பிடித்த பச்சைக் காய்கறிகளை வீட்டிலேயே ஜூஸ் செய்து குடிக்கலாம். பச்சை காய்கறிகளில் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளனர், இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 

3. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து உங்கள் உடலில் உள்ள இரத்தத்தின் ஒழுங்கற்ற தன்மையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் மாற்றும். ஆனால், இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உங்கள் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன், இது குறைந்த கலோரி உணவாகும்.

4. ஓமம் ஜூஸ்
ஓமம் ஜூஸை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். ஆயுர்வேதத்திலும், இது வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள தைமோகுவினோன் என்ற செயலில் உள்ள மூலப்பொருள் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் உடல் இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்ற உதவும். இதனை உட்கொள்வதன் மூலம் வயிற்று கொழுப்பை குறைக்கலாம்.

5. இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு
இஞ்சி மற்றும் எலுமிச்சை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனுடன், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் உணவு நன்றாக செரிக்கப்பட்டு கொழுப்பு உருவாகாது. இதனை தினமும் உட்கொள்வதன் மூலம் பயன் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News