மனித உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தில் பிளாஸ்டிக் எப்படி இருக்கும் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் மெதுவாக நுழையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 80 சதவீத மக்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக்கின் மைக்ரோ துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர இந்த ஆய்வில் பல ஆச்சர்யமான விஷயங்கள் வெளிவந்துள்ளன. இந்த சிறிய துகள்கள் தண்ணீர், சுவாசம் மற்றும் உணவு மூலம் மனித உடலில் நுழைவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிளாடிக் பைகள் அல்லது டப்பாக்களில் சூடாக உணவை பேக் செய்வது, டிஸ்போஸபிள் என்னும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பிளேட்கள் மற்றும் கப்களில் சூடாக பரிமாறப்படுவது ஆகியவை, நமது உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நுழைய காரணமாகின்றன.
மேலும் படிக்க |நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!
77 சதவீத மக்களின் ரத்தத்தில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன
பரிசோதனை செய்யப்பட்ட 77 சதவீத மக்களின் இரத்த ஓட்டத்தில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டச்சு ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) மனித இரத்தத்தில் காணப்படும் பிளாஸ்டிக்கின் மிகவும் பொதுவான வடிவம் என்று கண்டறியப்பட்டுள்ளது என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. PET பொதுவாக தண்ணீர், உணவு மற்றும் ஆடைகளை பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
காற்று மற்றும் உணவு மற்றும் பானங்கள் மூலம் பிளாஸ்டிக் மனித உடலுக்குள் நுழையும் என்று ஆராய்ச்சியின் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இது மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. மனித உடலில் அதிக அளவு பிளாஸ்டிக் உள்செல்கிறது என்பதை இது காட்டுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உடலில் உள்ள இந்த பிளாஸ்டிக் துகள்களால், உடலின் உள் உறுப்புகளில் வீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்ப்டுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஐந்து வகையான பிளாஸ்டிக்குகள் ஆராய்ச்சியில் சோதிக்கப்பட்டன
ஆராய்ச்சியில் குறைந்தது ஐந்து வகையான பிளாஸ்டிக் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டிரீன், பாலிமெத்தில் மெதாக்ரைலேட், பாலிஎதிலின் மற்றும் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) உள்ளதா என 22 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன. 22 பேரில் 17 பேரின் இரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியை முன்னெடுத்து செல்ல பரிசீலனை
இரத்தத்தில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது வகை பிளாஸ்டிக் பிளாஸ்டிக் கேரியர் பேக்குகள் தயாரிக்கப் பயன்படும் பாலிஎதிலின் என்று அறிக்கை கூறுகிறது. இந்த ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் டிக் வெதக் கூறுகையில், 'நமது ரத்தத்தில் பாலிமெரிக் துகள்கள் உள்ளன என்பதற்கான முதல் அறிகுறிதான் எங்களது ஆய்வு. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. இந்த ஆராய்ச்சியை மேலும் முன்னெடுத்து விஞ்ஞானிகள் தற்போது பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க | தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR