Migraine: ஒற்றைத் தலைவலியா... இந்த ‘7’ உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க..!!!

ஒற்றைத் தலைவலி தீவிரமாக இருக்கும் போது, வாந்தி, தலைசுற்றல் ஏற்படுவதோடு, சத்தம் கேட்டல் தலைவலி அதிகரித்தல் (phonophobia), வெளிச்சத்தை பார்த்தால் கூட தலைவலி அதிகரித்தல் (photophobia) ஆகியவை அறிகுறிகளும் இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 27, 2021, 10:13 PM IST
  • சில உணவுகள் ஒற்றைத் தலைவலியை தூண்டும்.
  • சத்தம் கேட்டல் தலைவலி அதிகரித்தல் (phonophobia), வெளிச்சத்தை பார்த்தால் தலைவலி அதிகரித்தல் (photophobia) ஆகிய அறிகுறிகள்.
  • சில நேரங்களில், வாந்தி, குமட்டல், தலைசுற்றல் ஏற்படும்.
Migraine: ஒற்றைத் தலைவலியா... இந்த ‘7’ உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க..!!! title=

Migraine: ஒற்றை தலைவலி ஏற்பட்டால், தாங்க முடியாத வலி காரணமாக, நமது அன்றாட நடவடிக்கை பாதிக்கப்படுகிறது. 

ஹைதராபாத், சன்ஷைன் மருத்துவமனையின், நரம்பியல் துறை நிபுணரான,டாக்டர் விக்ரம் சர்மா, ஒற்றைத் தலைவலி குறித்து கூறுகையில், இது நரம்பியல் தொடர்பான பிரச்சனை எனக் கூறியதோடு, தலைவலி ஏற்படுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பே ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் ஆரம்பிக்கலாம் என்று கூறுகிறார்.

சோர்வு, மனச்சோர்வு, எரிச்சல் உணர்வு அல்லது கழுத்து பகுதி விறைப்பு ஆகியவை இதற்கான அறிகுறிகளில் அடங்கும். மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி தீவிரமாக இருக்கும் போது, வாந்தி, குமட்டல், தலைசுற்றல் ஏற்படுவதோடு, சத்தம் கேட்டல் தலைவலி அதிகரித்தல் (phonophobia)அல்லது வெளிச்சத்தை பார்த்தால் கூட தலைவலி அதிகரித்தல் (photophobia) ஆகியவை அறிகுறிகளும் இருக்கும். ஆனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், தலைவலியில் இருந்து தப்பிக்கலாம்.

ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை ஓட விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!

சாக்லேட்டுகள் (Chocolates): சாக்லேட்டுகள் ஒற்றைத் தலைவலியை தூண்டும் வாய்ப்பு அதிகம் உள்ள உணவு என விக்ரம் சர்மா கூறுகிறார். அமெரிக்காவின் மைக்ரேன் அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சாக்லேட்டுகள் அதிகம் சாப்பிடுபவர்களில், 22 சதவிகிதம் பேருக்கு ஒற்றைத் தலைவலி இருப்பது தெரிய வந்துள்ளது.

காஃபின் (Caffeine): அதிகப்படியான காஃபின் உட்கொள்வது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். சாக்லேட், காபி, டீயில் அதிக அளவு காஃபின் உள்ள என்றாலும், அதில் சிறிய அளவில் உள்ளதால், அது பாதிக்கப்படாது என மருத்துவ நிபுணர் கூறுகிறார்.

ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்

சீஸ் (Cheese): சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி அதிகம் சாப்பிடுபவர்களில், 35 சதவிகிதம் பேருக்கு ஒற்றைத் தலைவலி இருப்பது ஒரு ஆய்வில், தெரிய வந்துள்ளது.

அஸ்பார்டேம் (Aspartame): அஸ்பார்டேம் என்பது ஒரு செயற்கை சர்க்கரை. பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை இனிப்புகள் நிரம்பியுள்ளன. அஸ்பார்டேம் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் என்பதால், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

மோனோ சோடியம் குளுட்டமேட் (Monosodium glutamate - MSG) கொண்ட உணவுகள்: MSG என்பது குளுட்டமிக் அமிலத்தின் சோடியம் உப்பு . இது சில உணவுகளில் சேர்க்கப்படுகிறது. அமெரிக்கன் மைக்ரேன் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், MSG கடுமையான ஒற்றைத் தலைவலியை தூண்டலாம் என்பது தெரிய வந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (Cured Meats): இறைச்சியின் நிறம் மற்றும் சுவையைப் பாதுகாக்க பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் ஒற்றை தலைவலியை தூண்டும். இந்த உணவுகள் நைட்ரிக் ஆக்சைடை இரத்தத்தில் வெளியிடுகின்றன. இது மூளையில் உள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் என்று கூறப்படுகிறது.

நாள்பட்ட சீஸ் அல்லது டைரமைன் (Aged Cheese or Tyramine): புளித்த உணவில் காணப்படும் டைரமைன் ஒற்றை தலைவலியை தூண்டலாம். நாட்பட்ட பாலாடைக்கட்டி மற்றும் சோயா சாஸ் போன்றவற்றில் இது அதுகம் காணப்படுகிறது.

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News