எச்சரிக்கை: ஆண்மையை குறைக்கும் "பாஸ்ட் புட்"

Updated: Aug 12, 2017, 04:25 PM IST
எச்சரிக்கை: ஆண்மையை குறைக்கும் "பாஸ்ட் புட்"
Image courtesy: Pixabay

சீனாவில் உள்ள ஜீஜியாங்கின் வென்ஜோ சென் மத்திய மருத்துவமனையில் 19 வயது சிறுவனுக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்து வியப்பை ஏற்படுதிள்ளனர்.

சீனாவின் கிழக்கு ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள கங்கான் மாவட்டத்தை சேந்த இளைஞர் சியோ தனது 13வது வயதில், தன்னுடைய வலது மார்பின் ஒருபகுதி இயல்பு நிலைக்கு மாறாக அதிக வளர்ச்சி அடைவதை கவனித்துள்ளார்.

மருத்துவர்களை அணுகிய பொது அவருடைய வலதுபுற மார்பு பெண்களை போலவும், இடதுபுற மார்பு ஆண்களை போலவும் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் அவருடைய உடலில் அதிகப்படியான பெண் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யபடுகிறது எனவும், அதுதான்து இந்த நிலைக்கு காரணமாக அமைந்தது எனவும் கூறினார். இது போன்ற நிகழ்வு "க்னென்காமாஸ்டியா" என்று அழைக்கப்டும் என மருத்துவம் நிபுணர் பேன் ஜோகோலியம் தெரிவித்தார்.

அதிகபடியான துரித உணவு (Fast Food), பாலின-வளைக்கும் இரசாயனங்கள் கொண்டிருக்கும் உணவு சாப்பிடுவதும் இதற்கு காரணமாகும் என தெரிவித்தார்.

தற்போது சியாவோ மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.