பெண்களின் பல பிரச்சனைகளுக்கு வரப்பிரசாதமாகும் 'மஞ்சட்டி' ஆயுர்வேத மூலிகை!

மஞ்சிஷ்டா என்னும் மஞ்சட்டி பல மருத்துவ நன்மைகள் நிறைந்தது. மஞ்சட்டியில் காணப்படும் ஆந்த்ராக்வினோன்கள் பல உயிரியல் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 27, 2022, 12:55 PM IST
  • யூரிக் அமிலம் உடலில் கீல்வாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • மஞ்சட்டி அனைத்து வகையான ஹார்மோன் பிரச்சனைகளுக்கும் மருந்தாகும்.
  • PCODயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மஞ்சட்டி உட்கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும்.
பெண்களின் பல பிரச்சனைகளுக்கு வரப்பிரசாதமாகும் 'மஞ்சட்டி' ஆயுர்வேத மூலிகை! title=

மஞ்சிஷ்டா என்னும் மஞ்சட்டி பல மருத்துவ நன்மைகள் நிறைந்தது. மஞ்சட்டியில் காணப்படும் ஆந்த்ராக்வினோன்கள் பல உயிரியல் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இதில் ஹெபடோப்ரோடெக்டிவ், ஆன்டி-பங்கல், இம்யூனோமோடூலேட்டரி, ஹைபோடென்சிவ், வலி ​​நிவாரணி  ஆகிய பண்புகள் உள்ளன.

ஹார்மோன் பிரச்சனை

மஞ்சட்டி அனைத்து வகையான ஹார்மோன் பிரச்சனைகளுக்கும் மருந்தாகும். பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மஞ்சட்டி உட்கொள்வது இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் ஹார்மோன் உற்பத்தியை சீராக்கவும் உதவுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பைக் கோளாறு (PCOD) என்பது பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டை உள்ளடக்கிய இந்த பிரச்சனை காரணமாக,  ஒழுங்கற்ற மாதவிடாய், முகம், மார்பு, முதுகு அல்லது பிட்டம் ஆகியவற்றில் அதிகப்படியான முடி வளர்ச்சி, எடை அதிகரிப்பு ஆகியவை இதற்கான சில அறிகுறீகள். இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹார்மோன்கள் அதிக அளவுகளில் சுரப்பதும் தற்கான காரணங்களில் ஒன்று. 

யூரிக் அமிலம் 

யூரிக் அமிலம் உடலில் கீல்வாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனை பெண்களில் மிகவும் பொதுவானது. இதனால் உடலின் பல்வேறு பாகங்கள் மற்றும் மூட்டுகளில் வலி  ஏற்படும்.  இதற்கு மஞ்சிஷ்டாவை  திரிபலாவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், யூரிக் அமிலம் குறையும்.

மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம் 

வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு

மகப்பேற்றுக்கு பிறகான நோய்களுக்கான சிகிச்சையாக செயல்படுகிறது. மாத விடாயின் போது தோன்றும் அதிக வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்குக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

அழகு பராமரிப்பு

மாஞ்சிஷ்டா பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற தோலுக்கு நன்மை பயக்கும். மஞ்சிஷ்டா சாறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துகிறது. முகத்தில்  ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் போக்கி சருமத்தை அழகாக மாற்ற உதவுகிறது.

இருதய நோய்

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.  இந்த அபாயத்தை குறைத்து உடலை ஆரோக்கியமகா வைத்திருக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News