கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்: போப் பிரான்ஸிஸ்

கொரோனா வைரஸ் பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கித் தவிக்கின்றன. பல நாடுகளில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2021, 05:28 PM IST
  • கொரோனா வைரஸ் பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கித் தவிக்கின்றன.
  • பல நாடுகளில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது.
  • உலக அளவிலான தொற்று பாதிப்பு எண்ணிக்கை, லட்சங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்: போப் பிரான்ஸிஸ் title=

கொரோனா வைரஸ் பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கித் தவிக்கின்றன. பல நாடுகளில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது.  உலக அளவிலான தொற்று பாதிப்பு எண்ணிக்கை, லட்சங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் உள்ளது. 

உலகில் உள்ள ஒவ்வோரு குடிமகனும் பாதுகாப்பாக இருந்தால் தான், உலகில் தொற்று பரவல் (Corona Virus) கட்டுப்படும்.  ஏனென்றால், பெருந் தொற்று என்பதே, உலகில் ஒரு மூலையிலிலிருந்து ஒரு மூலைக்கு பரவக் கூடியது. அதனால், எழை நாடுகள் பாதுகாக்கப்படவில்லை என்றால், அங்கு ஏற்படும்  தொற்று பாதிப்பு, நாளை வளர்ந்த நாடுகளுக்கு பரவும் என்பது தான் உண்மை நிலை. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தடுப்பூசி தான்.  இந்நிலையில், வளர்ந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துக் கொண்டுள்ளன. ஆனால், ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன. இதனால்,  இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள், இதற்கான மொரோனா தடுப்பூசி மீதான அறிவுசார் காப்புரிமையை  நீக்க வேண்டும் உலக சுகாதார அமைப்பிடம் (WHO) வலியுறுத்தின. 

ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் கற்றாழை, வேம்பு!

ஆனால், பிரிட்டன், அமெரிக்கா போன்ற சில நாடுகள் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தன. தங்களது தொழிலுக்கு பாதிப்பு என பைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கொரோனா தடுப்பூசிகளுக்கான அறிவு சார் காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிப்பதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிரிட்டனும் இதற்கு இப்போது ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்பொழுது, கொரோனா தடுப்பூசிகளுக்கான அறிவுசார் காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை தானும் ஆதரிப்பதாக போப் பிரான்ஸிஸ் (Pope Francis), வாடிகனில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போப் பிரான்ஸிஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுத் தருவதை நான் ஆதரிக்கிறேன். இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முடிவுகளை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ALSO READ | #PIBFactCheck: 12+ குழந்தைகளுக்கு கோவேக்ஸின் அனுமதி? அரசு கூறுவது என்ன 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News