ஜாக்கிரதை:தலையில் நிறைய பொடுகு இருக்கா..? ஸ்கின் கேன்ஸரின் அறிகுறியாகவும் இருக்கலாம்..!

Skin Scalp Cancer: தலையில் அதிகம் பொடுகு இருந்தால் அது சரும புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா…?   

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2023, 12:56 PM IST
  • தலையிலும் சரும புற்றுநோய் வரும்.
  • அதிக பொடுகு மற்றும் முடி உதிர்தல் இதற்கான அறிகுறிகள்.
  • இதற்கு முதலில் மருத்துவரை அணுகி தீர்வு பெற வேண்டும்.
ஜாக்கிரதை:தலையில் நிறைய பொடுகு இருக்கா..? ஸ்கின் கேன்ஸரின் அறிகுறியாகவும் இருக்கலாம்..!  title=

தோல் புற்றுநோயைப் பற்றி பேசும்போது முழு உடலிலும் உள்ள தோலைப் பற்றி நாம் அடிக்கடி நினைக்கிறோம், ஆனால் உடலில் உள்ள ஒரு முக்கியமான பகுதியை மறந்துவிடுகிறோம். நம் உச்சந்தலையில். ஸ்கால்ப் கேன்சர் என்பது தோல் புற்றுநோயின் குறைவான அறியப்படும் ஒன்றாகும். தலையில் பொடுகு போன்ற செதில் செதிலாக கொட்டப்படும் தோல்கள்தான் இவை. இது, தலையில் உள்ள ஸ்கால்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் என கூறப்படுகிறது. அதிகப்படியான யூவி கதிர்களுக்கு நம் தலை ஆளாக்கப்பட்டால் இந்த வகையிலான புற்றுநோயினால் தாக்கப்படுவோம். 

நம் தலையில் முடி இருப்பதால் இதை அவ்வளவு எளிதாக கண்டு கொள்ள முடியாமல் போய் விடுகிறது. பலர் இதை சாதாரண பொடுகு பிரச்சனை என நினைத்து உதாசீனம் செய்து விடுவர். இந்த வகையான புற்றுநோய் இருப்பவர்களுக்கு எப்போதும் தலை அரித்துக்கொண்டே இருக்கும், அதிகமாக பொடுகு வரும். அந்த புற்றுநோயின் அளவை பொறுத்து இதற்கான அறிகுறிகள் வேறுபடும். இது புற்றுநோய் தான என கண்டறிவது எப்படி..?

1.ஆறாத புண்:

உச்சந்தலையில் ஏற்படும் புண் ஆறாமல் இருப்பது அல்லது தொடர்ந்து புண் ஏற்பட்டுக்கொண்டே இருப்பது உச்சந்தலையில் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையன்றி, எப்போதும் தலையை சொறிந்து கொண்டே இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டே இருப்பீர்கள், தலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிகமாக அறிக்கும். இதனால் தலையில் புண் ஆறாமலேயே இருக்கும். 

மேலும் படிக்க | எலும்புகளை இரும்பை போல் வலுவாக்கும் ‘சில’ சைவ உணவுகள்!

2.கட்டி ஏற்படுவது:

உச்சந்தலையில் ஒரு புதிய கட்டி, புடைப்பு அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும். உச்சந்தலையில் உள்ள புற்றுநோய் வளர வளர இதுவும் அதனுடன் சேர்ந்து வளரும். இது போன்ற கட்டிகள் தலையில் தோன்றும் பொது அது மென்மையாக அன்றி மிகவும் கடினமானதாக இருக்கும். இதன் நிறம் மற்றும் அளவு மாறும். இந்த கட்டியில் கை வைக்கும் முன்பு ஒரு நல்ல தோல் மருத்துவரை அனுகுவது நல்லது. 

3. புண்ணில் இருந்து ரத்தம் வழிதல்:

உச்சந்தலையில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது ஆறாமலேயே இருக்கும், அதிலிருந்து ரத்தம் வழிதல் அல்லது ஆறாமல் இருக்கும் புண்களில் இருந்து ரத்தம் வழிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, தலையில் ஏதாவது புண்கள் ஏற்பட்டால் அது ஒரு வாரத்திற்குள்ளாகவே ஆறி விட வேண்டும். அப்படி அது ஆறவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை பெறவும். 

4. முடி வளருவதில் பிரச்சனை:

உச்சந்தலையில் முடி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. முடி மெலிந்து போவது அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து முடி உதிர்தல் போன்றவை புற்றுநோயால் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதை புறக்கணிக்காமல் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெறுவது நல்லது. 

5. உடனடியாக சரி செய்யலாம்!

உச்சந்தலையில் வரும் சருமப்புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் உடனடியாக சரி செய்ய முடியும். ஆனாலும் இவை வேகமாக பரவக்கூடியவை. அதனால் இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது கடினம். இதற்கென்று பிரத்யேகமான சிகிச்சைகள் இருக்கின்றன. அதை குணப்படுத்துவதற்கு என மருத்துவர்களும் இருக்கின்றனர். வீட்டு வைத்தியம் செய்வதற்கு முன்னர், மருத்துவரிடம் ஒரு முறைக்கு பல முறை ஆலோசனை பெறவும். 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? கவலை வேண்டாம்.. கட்டுப்படுத்த டாப் 5 பயனுள்ள டிப்ஸ் இதோ!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News