ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! எலும்புகளை வலுப்படுத்தி உடல் எடையை குறைக்க டிப்ஸ்

Weight Loss Tips VS Bone Health: எலும்புகளை வலுவாக்கும் உணவுகள் உடலின் எடையையும் கூட்டுகிறதா? கவலை வேண்டாம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2023, 08:53 PM IST
  • எலும்புகளை வலுப்படுத்துவதும் டயட்
  • உடல் எடையையும் குறைக்கும்
  • ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! எலும்புகளை வலுப்படுத்தி உடல் எடையை குறைக்க டிப்ஸ் title=

நமது உடல் பருமனுக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவே, உடல் எடையை அதிகரிக்க காரணமாகிறது. கால்சியம் நிறைந்த பால், புரதம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளை சாப்பிடுவதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதோடு, முறையான உடற்பயிற்சியும் செய்து வந்தால், எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல, சுண்டல், கொண்டைக்கடலை, பட்டாணி, கருப்பு மொச்சை போன்ற பல வகைப் பயறுகளில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், உடலுக்குத் தேவையான ஊட்டசத்துக்களையும் வழங்குகிறது.

இவை அனைத்தையும் சரியாக கடைபிடித்தால், எலும்புகள் வலுப்படும், ஆனால், உடலின் எடையும் கூடுமே? என்ன செய்யலாம் என்று கவலையாய் இருக்கிறதா?

மேலும் படிக்க | நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஏழு சூப்பர் உணவுகள்

உண்மையில், ஆரோக்கியத்தை மேம்படுத்த பார்த்து பார்த்து சாப்பிடும்போது, ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்துவிடுகிறது. எனவே, எதையும் அளவோடு, சரியான சமயத்தில் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சில சமயம் நாம் அளவாக சாப்பிட்டாலும் கூட உடல் எடை கூடிவிடும். அப்போது என்ன செய்வது? உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரைக் குடிக்கலாம். அதிலும், அந்த வெந்நீரில் எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகுவதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

அதேபோல, வெங்காயத்தை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கிறது. ஆனால், வெங்காயத்தை பச்சையாக, அதாவது சாலடாக சேர்த்துக் கொண்டால் தான் உடல் எடை குறையும். வெங்காயத்தை சமைக்கும்போது, அதன் பண்புகள் மாறிவிடுகிறது.

மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் பழம்! மூளை மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் லிச்சி ஜூஸ்  

அதேபோல, நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை கூடாது. அதேபோல உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பைக் குறைக்க, ஆமணக்கு வேரை இடித்து கலந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து விட்டும் காலையில் அதை வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும். 

முருங்கை இலைச் சாற்றை தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். பச்சையாக முருங்கை  இலைச்சாற்றை குடித்தாலும் சரி, இல்லையெனில், முருங்கை இலையை சூப்பாக வைத்துக் குடித்தாலும் சரி, இரண்டுமே பலன் தரும். 

குடிக்கும் நீரில், சீரகம் அல்லது சோம்பை சிறிதளவு போட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடைகுறையும். இவை அனைத்துமே, எலும்புகளை வலுப்படுத்துவதுடன், உடல் எடையையும் குறைக்கும் சுலபமான வழிமுறைகள் ஆகும்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News