உடல் பருமன் நிச்சயமா குறையும்... ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறும் ‘4’ டிப்ஸ்!

உடல் பருமன் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் பல நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது என்பதை மறுக்க முடியாது.  உடல் பருமன், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, நரம்பு சம்பந்தமான நோய் போன்ற பபல வகையான உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2023, 01:50 PM IST
  • ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சொல்வதைக் கேட்டால், கண்டிப்பாக உடல் எடையைக் குறைக்க முடியும்.
  • ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் எடையை பராமரிக்க உதவுகின்றன.
  • உணவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் எடை குறைக்க மிகவும் உதவும்.
உடல் பருமன் நிச்சயமா குறையும்...  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறும் ‘4’ டிப்ஸ்! title=

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பரிந்துரைக்கு உடல் எடையைக் குறைக்கும் டயட்: தற்போதைய காலத்தில், உடல் பருமன் பிரச்சனை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக ஆகி வருகிறது, பிஸியான வாழ்க்கையில், உடல் செயல்பாடுகளுக்கு நேரமில்லாமல், வயிறு, இடுப்பு மற்றும் வயிற்றில் கொழுப்பு அதிகரித்து வருகிறது. . உடல் பருமன் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் அது நிச்சயமாக பல நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது என்பதை மறுக்க முடியாது. உடல் பருமனால், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, நரம்பு சம்பந்தமான நோய் மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற பபல வகையான உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சொல்வதைக் கேட்டால், கண்டிப்பாக உடல் எடையைக் குறைக்க முடியும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறும் அறிவுரைகள் 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை ஒரு ஆன்மீக குருவாக நாம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அவரே ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கான தீர்வையும் விளக்குகிறார். நீங்கள் விரும்பினால் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். உடல் எடையை குறைப்பது குறித்து பேசிய அவர், உணவு மற்றும் பானங்கள் குறித்து தனது ஆதரவாளர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். உங்கள் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க வேண்டுமானால் என்ன மாதிரியான டயட் எடுக்க வேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். இதை உங்கள் வாழ்வில் கடைபிடித்தால், நிச்சயம் உடல் எடை குறையும்.

உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்

உடல் நல பிரச்சனைகளை கொண்டு வரும் தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், ஆன்மீக குருவின் குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் என்ன உணவு மற்றும் பானங்களை உண்ண வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. மேலும் அவை உடலுக்கு பலம் தருவதுடன், அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் எடையை பராமரிக்க உதவுகின்றன, எனவே அவற்றை அன்றாட வாழ்வில் உட்கொள்ள வேண்டும்.

2. கார நீர் (Alkaline Water)

உடல் எடையை குறைக்க, நீங்கள் நீரேற்றத்துடன் இருப்பதும் அவசியம், ஏனெனில் இது உணவை சிறப்பாக வைத்திருக்கிறது. நீங்கள் தொடர்ந்து காரத் தண்ணீரைக் குடித்து வந்தால், எடை நிச்சயமாக குறையத் தொடங்கும்.

மேலும் படிக்க | அதிக ஆயுள் வேண்டுமா? ‘இந்த’ 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும்!

3. பனீர்

பால் பொருட்களில் பனீர் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது,. மேலும் இது புரதத்தின் வளமான மூலமாகும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கூற்றுப்படி, நீங்கள் அதை உட்கொண்டால், படிப்படியாக உடல் எடையை குறைக்கத் தொடங்கும். அதோடு பொதுவாகவே, உணவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் எடை குறைக்க மிகவும் உதவும்

4. உணவு பொருட்களை தேர்வு செய்வதில் கவனம்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கூற்றுப்படி, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு, நீங்கள் வெவ்வேறு நேரங்களில் இதனை பிரித்து உண்ண வேண்டும். அதாவது பருப்புகளை உண்ணும் நேரத்தில் சாதம், சப்பாத்தி சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் நாம் இந்த தவறை செய்கிறோம்.

( பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முட்டையை இந்த முறைகளில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News