எலும்பை வலுவாக்க நெல்லிக்காயை முந்தும் அருநெல்லி! சிறுநெல்லியின் மருத்துவ பலன்கள்

Nutritious Star gooseberry: நெல்லிக்காய் என்றால் அனைவருக்கும் பெருநெல்லிக்காயைப் பற்றித் தான் தெரியும். ஆனால், அதிக சுவையுடன் இருக்கும் அருநெல்லியின் சுவை மட்டுமல்ல நோய் தீர்க்கும் பண்புகளும் அபாரம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 20, 2023, 06:52 PM IST
  • அருநெல்லிக்காயின் அபார மருத்துவ பண்புகள்
  • நெல்லிக்காயின் இளைய சகோதரி
  • ஊட்டச்சத்து நிறைந்த அருநெல்லிக்காய்
எலும்பை வலுவாக்க நெல்லிக்காயை முந்தும் அருநெல்லி! சிறுநெல்லியின் மருத்துவ பலன்கள் title=

நெல்லிக்காயின் குடும்பத்தை சேர்ந்த அருநெல்லி, நெல்லிக்காயின் தங்கை என்று சொல்லும் அளவு நெல்லிக்காயைப் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருந்தாலும் சித்த மருத்துவத்தில், அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், சமையலிலும் வேறு உணவுகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் என்றால் அனைவருக்கும் பெருநெல்லிக்காயைப் பற்றித் தான் தெரியும். ஆனால், பெருநெல்லியைவிட நல்ல சுவையில் இருக்கும் அருநெல்லியின் சுவை மட்டுமல்ல நோய் தீர்க்கும் பண்புகளும் அபாரம்...

அருநெல்லியின் மருத்துவப் பண்புகள்
செரிமானத்திற்கு அருநெல்லி: அருநெல்லியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து வயிற்று பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றன. அருநெல்லியில் உள்ள நார்ச்சத்தானது குடலில் உள்ள நச்சுகளை எளிதாக வெளியேற்றுகிறது. மலமிளக்கியாகச் செயல்படுவதற்கு இதன் நார்ச்சத்து காரணம். மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வாகும் அருநெல்லியை தினசரி நான்கு அல்லது 5 சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்

நோய் எதிர்பாற்றல்
விட்டமின் சி அதிகளவு உள்ள அருநெல்லிக்காய், உண்ண சுவையாக இருப்பதால், பெருநெல்லியை விட அதிகமாக உண்ணலாம். விட்டமின் சி, உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கக்கூடியது. சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து அருநெல்லி பாதுகாக்கிறது.

சரும பாதுகாப்பிற்கு அருநெல்லிக்காய்
ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் அதிகம் கொண்ட அருநெல்லி, சருமத்தை பாதுகாக்கிறது. விட்டமின் சி அதிகம் கொண்ட உணவு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மிருதுவாகவும், பொலிவாகவும், பளபளப்பாகவும் சருமத்தை மாற்றும் தன்மை கொண்ட அருநெல்லி, வறண்ட சருமத்த்தை கொண்டவர்களுக்கு நல்ல தீர்வாக அமையும்.

எடை குறைப்பிற்கு அருநெல்லி
அருநெல்லி மரத்தின் இலைஉடல் எடை குறைப்பிற்கு சிறந்த தீர்வாகும். நெல்லி இலையில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், பிளவனாய்டுகள், சபோனின், டானின்கள், பாலிபீனால்கள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. அருநெல்லியைப் போலவே, அதன் இலைகளையும் உணவில் பயன்படுத்தலாம். இந்த இலையில் உள்ள சபோனின் சத்தானது, அதிகமான கொலஸ்ட்ராலை குடல் உறிஞ்சாமல் தடுக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

மேலும் படிக்க | Superfood Veg: வாழைக்காய் தீர்க்கும் 5 நோய்கள்... நோயாளிகளுக்கு அருமருந்தாகும் வாழை

அனீமியாவை போக்கும் அருநெல்லி
அதிகளவு இரும்புச்சத்தையும், விட்டமின் சி ஊட்டச்சத்தையும் கொண்டுள்ளது. இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து பெறப்பட்டு உடலால் உட்கிரக்கிக்கப்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் அனீமியாவைக் குணப்படுத்த அருநெல்லிகாயை உண்ணலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அருநெல்லி
அருநெல்லிக்காயில் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகளவு உள்ளன. எனவே தினசரி அருநெல்லியை உண்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு, மூட்டுகளும் வலுவாகின்றன. வலுவான எலும்புகளைப் பெற அருநெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அருநெல்லி ஜூஸ்

பொதுவாக மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், வீடுகளில், அருநெல்லியை இரசம், ஊறுகாய் மற்றும் அருநெல்லி சாறு எடுத்து பயன்படுத்துவார்கள். எப்படி சாப்பிட்டாலும், நல்ல ஆரோக்கியத்திற்கு அருநெல்லி மிகவும் அருமையானது.  

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மூட்டு வலிக்கு 'பை' சொல்ல இந்த பழங்களுக்கு 'ஹாய்' சொல்லுங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News