புதுடெல்லி: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பல சமயங்களில் மிக இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. இது தவிர அதிக டென்ஷன் மற்றும் மோசமான நீர் போன்றவறால் வெள்ளை முடி வர ஆரம்பித்து விடுகிறது. இப்பிரச்சனையைத் தவிர்க்க, இளைஞர்கள் சில தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள், அதனால் அவர்கள் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். குறிப்பாக வெள்ளை முடிக்கு வண்ணம் பூசத் தொடங்குவது, அவற்றை வெட்டுவது போன்றவற்றை.
வெள்ளை முடியைக் கண்டால் என்ன செய்வது?
வெள்ளை முடியைப் பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டிய அவசியமில்லை, சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். உங்கள் தலைமுடி நேரத்திற்கு முன்பே வெண்மையாக மாற ஆரம்பித்தால், அவற்றை பிடுங்கும் தவறை செய்யாதீர்கள். இதனால் வெள்ளை முடி இன்னும் அதிகமாக வளரும்.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
காஃபின் உட்கொள்ளலைக் குறைக்கவும்
வெள்ளை முடி ஆரம்பிக்கும் போது, காஃபின் உள்ள பொருட்களை உட்கொள்வதை குறைக்கவும். இது தவிர ஃபோலிக் அமிலம் நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள். கிரீன் டீயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மருதாணியை பயன்படுத்தவும்
வெள்ளை முடியை தடுக்க மருதாணியை பயன்படுத்தவும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். தொடர்ந்து தடவினால், முடி பளபளப்பாகும்.
எண்ணெய் சார்ந்த நிறத்தைப் பயன்படுத்தவும்
வெள்ளை முடிக்கு சாயம் பூசுவதன் மூலம், அவற்றின் இயற்கையான நிறம் போய்விடும். உங்கள் முடி நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, எண்ணெய் அடிப்படையிலான முடி நிறம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR