குண்டு பெண்ணின் எடை ககுறையவில்லை- சகோதரி குற்றச்சாட்டு!!

Last Updated : Apr 25, 2017, 12:22 PM IST
குண்டு பெண்ணின் எடை ககுறையவில்லை- சகோதரி குற்றச்சாட்டு!! title=

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் மிகவும் குண்டான பெண்ணின் உடல் எடை குறையவில்லை என்றும் டாக்டர் தவறான தகவலை கூறுகிறார் என குண்டு பெண்ணின் சகோதரி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார். 

எகிப்து நாட்டை சேர்ந்த இமான் அகமது என்ற பெண் உலகிலேயே குண்டான பெணாக கருதப்படுபவர். இவர் தன் உடல் எடையை குறைக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த பிப்ரவரி 11-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் இவர் மும்பைக்கு வந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது 500 கிலோ எடை இருந்தார்.

சமீபத்தில் அவருக்கு உடல் எடையை குறைப்பதற்கான சிறப்பு அறுவை சிசிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் சுமார் 150 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் தற்போது இமான் அகமது 358 கிலோ இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

மேலும் அவருக்கு தினமும் சிறப்பு டயட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு நாளுக்கு 1,800 கலோரிஸ் அளவிற்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் நீர் ஆகாரமாகவே வழங்கப்பட்டு வருகிறது. 

சிறு வயதில் யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்ட இமான் அகமதுவிற்கு சரியான சிகிச்சை இல்லாததால் அந்த நோயின் தாக்கம் உடல் முழுவதும் பரவி உடலின் அனைத்து பாகங்களும் குண்டானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குண்டு பெண்ணின் சகோதரி கூறியதாவது:

எனது சகோதரிக்கு உடல் பருமன் குறைப்பு சிகிச்சை நிபுணரான முப்சால் லாக்டாவாலா சிகிச்சை அளித்து வருகிறார். ஆனால், என் சகோதரியின் உடல் நிலை குறித்த தகவல்களை சரியாக தெரிவிக்கவில்லை. என் சகோதரி உடல் நிலையில் சிறிதளவு கூட முன்னேற்றம் இல்லை. இந்த விஷயத்தில் டாக்டர் கூறுவது பொய். 

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News