Fenugreek: ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டா இவ்வளவு நல்லதா? நோய்களுக்கு வேம்பாகும் வெந்தயம்!

வெந்தயம் ஒரு அருமையான உணவுப் பொருள் மட்டுமல்ல, பல நோய்களுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறது, வெந்தயத்தின் அற்புதமான ஆரோக்கிய பயன்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2022, 12:21 PM IST
  • நோய்க்கு வேம்பாகும் வெந்தயம்!
  • வெந்தயக்கீரையில் நார்ச்சத்து அதிகம்
  • நீரிழிவுக்கு உகந்தது வெந்தயம்
Fenugreek: ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டா இவ்வளவு நல்லதா? நோய்களுக்கு வேம்பாகும் வெந்தயம்! title=

புதுடெல்லி: வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது.

வெந்தயம் ஒரு அருமையான உணவுப் பொருள் மட்டுமல்ல, பல நோய்களுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறது, வெந்தயத்தின் அற்புதமான ஆரோக்கிய பயன்கள்...

வெந்தயத்தின் வித்தியாசமான மணமும், குணமும், உணவை சுவையாக மாற்றுகிறது. ஆனால் வெந்தயத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

ALSO READ | எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’  

வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன.  

வெந்தயத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் பல நோய்களையும் தடுக்க முடியும், வெந்தயத்தை சமைத்தும், விதையாகவும் சாப்பிடலாம்.

வெந்தயக் கீரையை, அப்படியே சமைத்தும் சாப்பிடலாம். அதேபோல, வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். 

வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவற்றில் முக்கியமான ஐந்து நன்மைகள்.

ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!

1. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். நீரிழிவு நோயாளிகள் ஊறவைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

2. எலும்புகள் வலிமையாகும்
வெந்தயம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நிறைய கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் தேவையற்ற மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

3. உடல் எடையை அதிகரிக்கச் செய்தல்
உடல் பருமன் தான் பல நோய்களுக்கு அடிப்படை. உடல் எடை அதிகரிப்பை தடுக்க நினைப்பவர்களுக்கு வெந்தயம் அருமருந்து., வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தேவையற்ற எடை குறையும்.

ALSO READ | ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகும் சின்ன வெங்காயம்

4. கொலஸ்ட்ரால் சிகிச்சை
வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

5. வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
இந்தியாவில் அமிலத்தன்மை போன்ற நோய்களுக்கு மூலகாரணமான காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணும் போக்கு உள்ளது. ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்றுக்கு மிகுந்த நிவாரணம் அளிக்கிறது.

(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News