உலகிலேயே உயர்ந்த மனிதர் டாக்டர் அம்பேத்கர்! 125 அடி உயர அம்பேத்கர் சிலை ஹைதராபாதில்

125 feet Statue Of Ambedkar: சமூக மறுமலர்ச்சியின் முன்னோடியும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125 அடி உயர சிலை இன்று  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2023, 01:48 PM IST
  • அம்பேத்கரின்125 அடி உயர சிலை
  • நாட்டுக்கு அர்ப்பணிக்கும் தெலங்கானா மாநில அரசு
  • ஏப்ரல் 14: டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஜெயந்தி
உலகிலேயே உயர்ந்த மனிதர் டாக்டர் அம்பேத்கர்! 125 அடி உயர அம்பேத்கர் சிலை ஹைதராபாதில் title=

ஹைதராபாத்: புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று. சமூக மறுமலர்ச்சியின் முன்னோடியும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கருக்கு மரியாதை செய்யும் வகையில் தெலங்கானா மாநில அரசு, அவரது 125 அடி உயர சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவிருக்கிறது.

ஹைதராபாத்தில் இன்று திறக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை திறப்பு நிகழ்வில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மட்டுமே தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று, சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஹைதராபாத்தில் 125 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் அம்பேத்கர் சிலை 

இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கரின் சிலை இதுவாகும், இது தெலங்கானா மாநில செயலகத்திற்கு அருகில், புத்தர் சிலைக்கு எதிரே மற்றும் தெலுங்கானா தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | தோஹா டயமண்ட் லீக்கில் சாதிக்கக் காத்திருக்கும் நீரஜ் சோப்ரா! தோஹா போட்டிகளில் ஒலிம்பிக் சாம்பியன்

அம்பேத்கரின் சிலையை அமைக்க கே.சி.ஆரால் முடிவு எடுக்கப்பட்டதில் இருந்து தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை இறுதி செய்ய குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆனது

இந்த சிலையை வடிவமைத்தவர் பத்ம பூஷன் விருது பெற்ற 98 வயதான ராம் வஞ்சி என்ற சிற்பி ஆவார்.

அம்பேத்கர் சிலை திறப்பு கூட்டத்தில் 119 தொகுதிகளில் இருந்தும் 35,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 300 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக இன்று ஹைதராபாதில் 750 அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

ஐதராபாத் சட்டசபை வளாகத்திற்கு வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பொதுமக்களுக்கு ஒரு லட்சம் இனிப்பு பாக்கெட்டுகள், 1.50 லட்சம் மோர் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.

இந்திய அரசியலமைப்பின் தந்தை' பி.ஆர்.அம்பேத்கர்  
டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், பாபாசாகேப் அல்லது 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி ஆவார்.

1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், நாட்டில் சாதி அமைப்பு மற்றும் மில்லியன் கணக்கான இந்தியர்களை பாதித்த சமூக-பொருளாதார பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கர், டிசம்பர் 6, 1956 அன்று டெல்லியில் இறந்தார்.  "கல்வியே சமூக மாற்றத்திற்கான மிகச்சிறந்த ஆயுதம்" என்ற தாரக மந்திரத்தை மக்களுக்கு போதித்த அம்பேத்கர், "கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்" எனக் கூறிய புரட்சியாளர் ஆவார்.

அவர் கொண்ட லட்சியமும், அதற்காக அவரது அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பிற்குமான ஒரு சிறிய அர்ப்பணிப்பு, அம்பேத்கருக்கு தெலங்கானா மாநிலம் அமைத்திருக்கும் பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை ஆகும்.

மேலும் படிக்க: உச்ச நீதிமன்ற வாயிலில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News