ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் 2% வரி வசூலிக்கப்படும்

வருடத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தால் 2% வரி வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 5, 2019, 01:28 PM IST
ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் 2% வரி வசூலிக்கப்படும் title=

புதுடெல்லி: இன்று மக்களவையில் பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். 

வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் வரி விகிதங்கள் அறிவிக்கப்படும். நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும் என பேசினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

அவர் வரியைக் குறித்து கூறியது, 

> கடந்த சில ஆண்டுகளாக நேரடி வரி வருவாய் அதிகரித்து வருவதால், சுமார் 78 விழுக்காடு அளவிற்கு நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. நேரடி வரி வருவாய் 11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

> ரூ.5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. 

> 400 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 

> ஆண்டு வருமானம் 2 கோடியில் இருந்து 5 கோடி வரை இருந்தால் கூடுதல் வரியாக 3% வரி விதிக்கப்படும். 

> 5 கோடிக்கு மேல் வருமானம் பெற்றால் அவர்களுக்கு 7% வரி கூடுதல் வரியாக விதிக்கப்படும்.

> மின்சார வாகன கடனுக்கான வட்டியில் வரி விலக்கு அளிக்கப்படும். 

> ஒரு வருடத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தால் 2% டி.டி.எஸ் வசூலிக்கப்படும். 

> ஆதார் அட்டைகளை வைத்திருப்பதால் ஆதார் எண்ணை அளித்து வரி கட்டலாம். ஆதார் இருக்க வேண்டிய இடத்தில் இனி நீங்கள் பான் கார்டை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

> குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய்க்கான வரி குறைப்பு. 15 ஆண்டுகளில் வீட்டுக்கடனுக்காக ரூ. 7 லட்சம் வரை மிச்சமாகலாம்.

> பார்வையற்றவர்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடிய ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 புதிய நாணயங்கள் விரைவில் பொது பயன்பாட்டிற்கு வரும்.

Trending News