BJP தேசிய செயற்குழு 2 வது நாள் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்...

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்ப்பு...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2018, 09:44 AM IST
BJP தேசிய செயற்குழு 2 வது நாள் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்... title=

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்ப்பு...! 

பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் நேற்று தொடங்கியது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கடந்த மக்களவைத் தேர்தலைவிட, பா.ஜ.க. மேலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியமைக்க தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், கட்சியின் தலைவரான அமித்ஷாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

ஆனால், அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தலும், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளதால், பா.ஜ.க.வின் உட்கட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அமித்ஷா தலைமையிலேயே பொதுத்தேர்தலை சந்திப்பது என நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இன்றைய தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அமைச்சர்களிடம் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் உரையாற்றுகிறார் என தெரிவித்துள்ளனர். 

 

Trending News