ஆருஷி கொலை வழக்கு: தல்வார் தம்பதியினர் விடுவிப்பு!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதியினர் நிரபராதிகள் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது!

Last Updated : Oct 12, 2017, 03:18 PM IST
ஆருஷி கொலை வழக்கு: தல்வார் தம்பதியினர் விடுவிப்பு! title=

அலகாபாத்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதியினர் நிரபராதிகள் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது!

டெல்லியின் அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் தம்பதியரின் மகள் ஆருஷி தல்வார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜு இருவரும் அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில காவல்துறையால் துப்பு துலக்க முடியாததால் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

விசாரணையின் முடிவில் வழக்கின் திருப்புமுனையாக ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுல் தல்வார் கைது செய்யப்பட்னர்.

இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், இருவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இவ்வழக்கின் விசாரணை கடந்த புதன்கிழமை முடிவடைந்த நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆருஷியின் பெற்றோர் நிரபராதிகள் என அலகாபாத் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது!

Trending News