லண்டனில் புதிய வைர வியாபாரத்தை துவங்கிய நிரவ் மோடி....

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து லண்டனில் வைர வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!!

Last Updated : Mar 9, 2019, 11:05 AM IST
லண்டனில் புதிய வைர வியாபாரத்தை துவங்கிய நிரவ் மோடி.... title=

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து லண்டனில் வைர வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் பெற்ற திருப்பியளிக்காமல் வெளிநாடு தப்பி சென்றதாக தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியே முறைகேடு வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமாக இந்தியாவில் இருக்கும் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் நீரவ் மோடிக்கு சொந்தமாக ஹாங்காங்கிலுள்ள ரூ. 255 கோடி சொத்துக்களும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டதின் கீழ் முடக்கப்பட்டது.

இதையடுத்து, 14 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரிகளும் உறவினர்களுமான நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். இருவரையும் நாடு கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்த விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன. நிரவ் மோடிக்கு எதிராக இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளதுடன், லண்டனில் உள்ள அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிரிட்டன் அரசிடம் இந்தியா கேட்டுள்ளது.

இந்நிலையில், நிரவ் மோடி, லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில், சோகோ என்ற இடத்தில் அடுக்குமாடி சொகுசு குடியிருப்பில் வசித்து வருவதாக, டெய்லி டெலிகிராஃப் பத்திரிக்கையின் இணையதளத்தில் வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிரவ் மோடி ஹேண்டில்பார் (handlebar) மீசை வைத்துக்கொண்டு, சற்று பெருத்து சட்டென்று அடையாளம் காண முடியாத வகையில் இருக்கிறார்.

அவர் அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக, லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டிருப்பதாகவும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் "Sorry no comment" என நிரவ் மோடி பதிலளிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

லண்டனில் நிரவ் மோடி, புதிதாக வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதுடன், தாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அலுவலகமும் வைத்துள்ளார் என்று டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது. நிரவ் மோடி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை மாதத்திற்கு 18 ஆயிரம் பவுண்டுகள் என்றும் டெய்லி டெலிகிராஃப் கூறியுள்ளது. இது, இந்திய மதிப்பில் 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகும்.

 

Trending News