கேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது முதல்கட்ட உதவிதான், மேலும் உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது..!
இந்த வருடம் கேரளாவில் வரலாறு காணாத மழை பொழிவால் கேரளாவில் வெள்ள பேருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் பாதித்தது. இந்நிலையில், கேரளாவை மீண்டும் பழைய நிலைக்கு மீட்க நிவாரண நிதிகளை கொடுத்து வருகின்றனர்.
கேரளாவுக்கு வழங்கப்பட்ட வெள்ளநிவாரணத் தொகை 600 கோடி ரூபாய் வெறும் முன்னோட்டமே என்றும் கூடுதலான நிதியுதவியை அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியை அளிக்க முன்வந்த நிலையில் வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. வெளிநாட்டு நிதியைப் பெற அனுமதியளிக்காவிட்டால் அதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தரவேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் வலியுறுத்தியிருந்தார்.
வெள்ள நிவாரண நிதிக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கியது போதாது என கேரளா தெரிவித்த நிலையில்,மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தொகை முன்பணம்தான் என்றும், வெள்ளச்சேதம் குறித்து தேசியப் பேரிடர் மீட்புக் குழு மற்றும் அமைச்சர்கள் குழு ஆகியவை ஆய்வு செய்து, முழுமையான அறிக்கை வரும்போது, மேலும் தேவையான நிதியை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.