பிரணாப் உரையால் ஆர்.எஸ்.எஸ் இணைய அதிக பேர் விண்ணப்பம்!

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பின், அந்த அமைப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!  

Last Updated : Jun 26, 2018, 10:14 AM IST
பிரணாப் உரையால் ஆர்.எஸ்.எஸ் இணைய அதிக பேர் விண்ணப்பம்! title=

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட பின், அந்த அமைப்பில் சேர விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். 

அப்போது அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம் என்று உரையாற்றினார். பிரணாப் முகர்ஜியின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும்,  பிரணாப் முகர்ஜியின் இந்த உரைக்கு பின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதாக அந்த அமைப்பின் மூத்த தலைவர் விப்லப் ராய் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர்கள் கூறும்போது,,! 

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொண்ட பின், எங்கள் அமைப்பில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக, தினமும் 350 விண்ணங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், பிரணாப் கலந்து கொண்ட பின், தினமும் 1,200 முதல் 1,300 விண்ணப்பங்கள் வரை வந்து கொண்டிருகின்றனர்.

அதிலும் பெரும்பாலான விண்ணப்பங்கள்,பிரணாப்பின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News