பைசாபாத் நகருக்கு நரேந்திர மோடிபூர் என பெயர் வைக்கலாம் :கிண்டல் செய்த நீதிபதி

பைசாபாத் நகருக்கு நரேந்திர மோடிபூர் எனவும், ஃபதேப்பூருக்கு அமித்ஷாநகர் என கூறி 18 நகரங்களுக்கு என்ன பெயர்கள் வைக்கவேண்டும் என பட்டியலிட்டுள்ளார் முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்சு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 11:07 PM IST
பைசாபாத் நகருக்கு நரேந்திர மோடிபூர் என பெயர் வைக்கலாம் :கிண்டல் செய்த நீதிபதி title=

விரைவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள “அலகாபாத்” நகரின் பெயரை “பிரயாக்ராஜ்” என்று மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏற்கனவே, சமீபத்தில் அம்மாநிலத்தில் மொகல்சராய் என்ற ஊரின் ரயில் நிலையம் "தீன்தயாள் உபாத்தியா" என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பெயர் மாற்றத்துக்கு சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் கட்சி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் யோகி ஆதித்யநாத் முடிவுக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் நகரங்களின் பெயர் மாற்றத்திற்கு, முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்சு 18 புதிய பெயர்களை பரிந்துரைத்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

 

அன்புள்ள யோகிஜி, 

“அலகாபாத்” நகரின் பெயரை “பிரயாக்ராஜ்” என்று மாற்றம் செய்வதற்கு வாழ்த்துக்கள். 

ஆனால் நிச்சயமாக அது போதாது.. இந்த "பாபூர் கி ஆலாஸின்" பெயர்களை அகற்ற உ.பி. நகரங்களுக்கு பின்வரும் பெயர் மாற்றங்களை நான் பரிந்துரைக்கிறேன் எனக் கூறி, 18 நகரங்களின் பெயர்களை எப்படி மாற்றம் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கிண்டல் செய்துள்ளார்.

இவர் பரிந்துரைத்த பட்டியலில், பைசாபாத் நகருக்கு நரேந்திர மோடிபூர் எனவும், ஃபதேப்பூருக்கு அமித்ஷாநகர் எனவும், மொராதாபாத்திற்கு மான்கிபாத்நகர் என கூறி 18 நகரங்களுக்கு என்ன பெயர்கள் வைக்கவேண்டும் என பட்டியலிட்டுள்ளார்.

Trending News