CAA Protest: மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு AIIMS நிர்வாகம் எச்சரிக்கை

மாணவர்கள், மருத்துவர்கள் எந்த வகையான போராட்டங்களில் ஈடுபடக்கூடாதென எய்ம்ஸ் நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் எச்சரித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 19, 2019, 07:47 PM IST
CAA Protest:  மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு AIIMS  நிர்வாகம் எச்சரிக்கை title=

புது டெல்லி: புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன.

முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. சீலம்பூர், ஜாப்ராபாத் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும் வீதிகளில் இறங்கி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுகளையில் கைது செய்யப்பட்டனர். மேலும் பொது சொத்துக்களை சூறையாடியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இதற்கிடையில், வியாழக்கிழமை, திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இடதுசாரி கட்சிகள் முழு அடைப்பு அறிவித்துள்ளன, மேலும் மும்பை மற்றும் பிற இடங்களில் எதிர்ப்பு அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் செங்கோட்டைக்கு அருகே 144-வது பிரிவு விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே, 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது. மேலும் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்த நிலையிலும், போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் எவ்வித போராட்டங்கள், தர்ணா, வேலை நிறுத்தம் ஸெய்யக்கூடாது என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News