Air India disinvestment: டாடா குழுமத்திடம் செல்கிறதா ஏர் இந்தியா?

இந்தியாவின் டாடா சன்ஸ் குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலப் போட்டியில் வென்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 01:15 PM IST
Air India disinvestment: டாடா குழுமத்திடம் செல்கிறதா ஏர் இந்தியா? title=

இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் அடையாளமாக பல தசாப்தங்களாக விளங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு சென்ற ஆண்டு முடிவு செய்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதமே, இந்த விற்பனை செயல்முறை தொடங்கியது. எனினும், கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் காரணமாக உலகம் முழுதும் உருவான அசாதாரண நிலையால் இந்த செயல்முறை தாமதமானது.

ஏர் இந்தியா (Air India) கடன்களில் மூழ்கியுள்ளது. விற்பனை செயல்முறை தொடங்கியது முதல், பல தனியார் நிறுவனங்கள் இதை வாங்க முயற்சிகள் எடுத்து இந்த செயல்முறையில் பங்கு கொண்டனர். இந்த நிலையில், இந்தியாவின் டாடா சன்ஸ் குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலப் போட்டியில் வென்றுள்ளதாக ப்ளூம்பெர்க் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கேட்கப்பட்ட போது, டாடா சன்ஸ் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இது பற்றிய கருத்தைக் கேட்டு செய்தி அனுப்பிய ராய்ட்டர்சுக்கு நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளர் உடனடியாக பதிலளிக்கவில்லை. அதே நேரத்தில் ஏர் இந்தியா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ALSO READ: Digital Health ID: இந்த கார்டை உருவாக்குவது எப்படி? இதன் பயன்கள் என்ன? 

பிரதமர் நரேந்திர மோடியின் (PM Modi) அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு முதல் பிணையெடுப்பு மூலம் உயர்த்தி வைக்கப்பட்டு, நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை விற்பதில் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

700 பில்லியன் ரூபாய்க்கு மேல் (9.53 பில்லியன் டாலர்) இழப்புக்களைக் குவித்துள்ள தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் இயக்கத்தில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியாவின் பெரும்பான்மை பங்குகளை ஏலம் எடுக்கும் எடுக்கப்பட்ட முயற்சியில் பெரிய அளவில் எந்த நிறுவனமும் பங்கெடுக்கவில்லை. இதனால், அரசாங்கம் அதன் நிபந்தனைகளை சற்று குறைக்க வேண்டியதாயிற்று. மேலும், தொற்றுநோய் (Pandemic) காரணமாக காலக்கெடுவும் பல முறை நீட்டிக்கப்பட்டது.

ALSO READ: Cyber Attack: 45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் Credit Card உள்ளிட்ட விவரங்கள் திருட்டு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News