Air Pollution: உச்சகட்டத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு

தீபாவளிக்குப் பிறகு, டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதால், பள்ளிகள் மூடப்படுகின்றன, அரசு அலுவகங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2021, 09:14 AM IST
  • மூச்சுத் திணறும் டெல்லி
  • உச்சகட்டத்தில் காற்று மாசுபாடு
  • டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டது
Air Pollution: உச்சகட்டத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு title=

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனை அதிகரித்திருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு, டெல்லியில் சுவாச பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. எனவே, சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

அதிலும் குறிப்பாக, தீபாவளிக்குப் பிறகு, காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதால், பள்ளிகள் மூடப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், டெல்லி மருத்துவமனைகளில் சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்படுகின்றனர். டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமும் 10-12 நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமத்துடன் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார். 

Also Read | தில்லியில் காற்று மாசு: லாக்டவுன் அறிவிக்கப்படுமா?

தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பொதுவாக, வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்றில் நீண்ட காலத்திற்கு PM 2.5 அதிக அளவில் இருப்பது நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கலாம்.

டெல்லி மக்களில் பெரும்பாலோர் மூச்சுத் திணறல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஆஸ்துமா அதிகரித்து வருவதும் கவலையளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, முகக்கவசங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது இரண்டு மட்டுமே பாதுகாக்கும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றில் அதிகரித்து வரும் PM 2.5 துகள்களின் அளவினால், நுரையீரல் தொற்று, கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படும், டெல்லியில் சனிக்கிழமையன்று 'கடுமையான' நிலையில் இருந்த காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமையன்று 'மிகவும் மோசமான' வகைக்கு மாறியது. காற்றின் தர முன்னறிவிப்பு அமைப்பின் முன்னறிவிப்பின்படி, டெல்லியில் காற்றின் தரம் செவ்வாய் வரை AQIவின் மிகவும் மோசமான பிரிவில் இருக்கும்.

READ ALSO | டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தில்! 436 AQI!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News