வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் நிலையில், நாளை (ஜூன்1) முதல் ஜூன் 6ம் தேதி வரை பழைய இணைய தளம் இயங்காது என வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
வருமான வரித் துறையில் (Income Tax Department) மின்னணு முறையில் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்ய தற்போது www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.
வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகள், தனிநபர் வருமான வரி கணக்குகள் இதில் தாக்கல் போன்றவற்றை மேலும் எளிதாக்கும் வகையிலும், ரீபண்ட் விரைவில் கிடைக்க செய்தல், வருமான வரி கணக்கு தொடர்பான மேல்முறையீடு, அபராதம், வரி மதிப்பீடு போன்றவை தொடர்பாக, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிசீலனை செய்ய ஏதுவாக, நவீன முறையில் புதிய இணையதளம் (New Website) வடிவைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
ALSO READ: SBI Alert: எஸ்பிஐ வங்கியின் பயனுள்ள அறிவிப்பு; வங்கி பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்
புதிய இணைய தளமான www.incometaxgov.in என்ற இணையததளம், வரும் ஜூன் மாதம் 7ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது.
புதிய இணையதளத்துக்கு தரவுகள், செயல்பாடுகள் அனைத்தையும் மாற்றுவது தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில், தற்போது உள்ள இணையதளம் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை இயங்காது.
புதிய இணையதளத்தில், வரும் 7ம் தேதி முதல் வருமான வரியை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டலும், புதிய இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ள அம்சங்கள், மாறுதல்கள் குறித்து நன்றாக அறிந்து கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், வரி தாக்கல் தொடர்பான செயல்பாடுகளை ஜூன் 10ம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.
ALSO READ: PF கணக்கு உள்ளவர்களுக்கு 7 லட்சம் ரூபாய்: யாருக்கு, எப்படி கிடைக்கும்? விவரம் உள்ளே!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR