சமூக நீதி தினமாக அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்படும்!

அம்பேத்கர் பிறந்த தினம் சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!

Last Updated : Mar 24, 2018, 08:10 AM IST
சமூக நீதி தினமாக அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்படும்! title=

டெல்லி: பா.ஜ.க எம்.பிக்கள் பங்கேற்ற பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேர்தல் தோல்வியால் துவண்டுள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசை பற்றி  பொய்யான தகவல்களை கூறி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அனில் பலூனி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அனில் பலூனி செய்தியாளர்களிடம் பேசியதாவது....! 

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இவர், 1891, ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். இவரது பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதியை ஆண்டுதோறும் இனி நாடு முழுவதும் சமூக நீதி தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மே 2-ம் தேதியை விவசாயிகள் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Trending News