குடும்பத்தின் மீதான மோகத்தை விட வேண்டும்: சோனியா காந்திக்கு மற்றொரு கடித ‘குண்டு’

கட்சித் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தின் மீதான மோகத்தில் இருந்து நீங்கி, கட்சியின் ஜனநாயக மரபுகளை காக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2020, 02:31 PM IST
  • கட்சித் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தின் மீதான மோகத்தில் இருந்து நீங்கி, கட்சியின் ஜனநாயக மரபுகளை காக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  • உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
  • கடந்த ஆண்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒன்பது காங்கிரஸ் தலைவர்கள் இந்த கடிதத்தை எழுதினர்
குடும்பத்தின் மீதான மோகத்தை விட வேண்டும்: சோனியா காந்திக்கு மற்றொரு கடித ‘குண்டு’ title=

காங்கிரஸ் கட்சி பொருத்தமான தலைமை இல்லாத காரணத்தினால், தேசிய அளவில் செல்வாக்கை இழந்து வருகிறது என கூறி சென்ற மாதம் கட்சிக்கு பொருத்தமான தலைமை தேவை என கட்சியை சேர்ந்த பலர் கடிதம் எழுதியதை தொடர்ந்து, பிரச்சனை வெடித்தது.

பின்னர், தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சோனியா காந்தியே தலைவராக நீடிப்பார் என கூறப்பட்டது.

தற்போது காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த முறை அது உத்தரபிரதேசத்திலிருந்து கடிதம் பறந்துள்ளது. கடந்த ஆண்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒன்பது மூத்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்கள் கட்சியை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.அவர் குடும்பத்தின் மீதான மோகத்தை விட்டு விலகி கட்சியை பற்றி சிந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

உ.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் சிங், முன்னாள் அமைச்சர் சத்யதேவ் திரிபாதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வினோத் சவுத்ரி, புதர் நாராயண் மிஸ்ரா, நெச்சந்த் பாண்டே, தானே பிரகாஷ் கோஸ்வாமி மற்றும் சஞ்சீவ் சிங் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மிக மோசமான நிலையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி வாத்ராவை மறைமுகமாக குறிவைத்து தாக்கி எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தில், கட்சித் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தின் மீதான மோகத்தில் இருந்து நீங்கி, கட்சியின் ஜனநாயக மரபுகளை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

”தாங்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக, அது சட்ட விரோதமானது எனக் கூறி, பல முறை நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஏறக்குறைய ஒரு வருடமாக உங்களைச் சந்திக்க நாங்கள் வாய்ப்பு கிடைக்க காத்திருக்கிறோம். ஆனால், இது வரை எங்கள் முறையீட்டை பரிசீலிக்க கட்சிக்கு நேரம் கிடைக்கவில்லை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்றும், நெருக்கடி காலத்தின் போது காங்கிரஸ் கட்சியில் உறுதியாக ஆதரவுடன் நின்ற தலைவர்களின் செயல்திறனை,  கட்சியின் சித்தாந்தத்தை கூட சரியாக அறியாதவர்கள் மதிப்பிடுகிறார்கள் என கட்சியின் மூத்த தலைவர்கள் எழுதிய அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

”கட்சியில் ஜனநாயக விதிமுறைகள் பறிக்கப்படுகின்றன. மூத்த தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள், வெளியேற்றப்படுகிறார்கள். உண்மையில், நாங்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதைப் பற்றி ஊடகங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டோம். கட்சித் தலைவர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தகவல் தொடர்பு என்பதே இல்லை” என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தலைமுறை கடந்தும் மாறாத தலைமை.. இந்திரா முதல் இன்று வரை நீடிக்கும் ஆதிக்கம்..!!!

Trending News