ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு குட் நியூஸ்! அதிக விமானங்களை இயக்க அனுமதி..!!

கொரோனா முதல் அலை தொடங்கிய காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 19, 2021, 09:20 AM IST
ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு குட் நியூஸ்! அதிக விமானங்களை இயக்க அனுமதி..!! title=

கொரோனா முதல் அலை தொடங்கிய காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி உள்நாட்டு விமானங்களை தொடக்க அனுமதி வழங்கிய போது, கோவிட்-க்கு முந்தைய காலகட்டத்தில் இயக்கப்பட்ட விமானங்களில் 33 சதவீதத்திற்கு மிகாமல் இயக்க அனுமதித்தது. இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020 டிசம்பர் மாதம் 80 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது, இது ஜூன் 1, 2021 வரை நடைமுறையில் இருந்தது.

பின்னர் கொரோனா (Corona Virus) இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த கால கட்டத்தில், மே 28 அன்று, ஜூன் 1, இயக்கக் கூடிய விமானங்களின் அளவை 80 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.  50 சதவிகித விமானங்களை இயக்குவது என்ற இந்த நடைமுறை ஜூலை 5 வரை அமலில் இருந்தது. பின்னர், இந்த அளவு 65 சதவீதமாக தளர்த்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 12 அன்று, அதிக பட்சமாக 72.5 சதவிகித விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

ALSO READ | Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 19) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

இந்நிலையில், தற்போது, அதிகபட்சமாக 85 சதவீத உள்நாட்டு விமானங்களை இயக்கலாம் என விமான நிறுவனங்களுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள விமான போக்குவரத்து துறை அதிலிருந்து விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வர பெரிதும் உதவியாக இருக்கும். 

ALSO READ | ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்..!!!

முதன்முதலில் ஊரடங்கு அறிவிப்பில், மிகவும் பாதிக்கப்பட்ட துறையில் ஒன்று விமான போக்குவரத்து துறையாகும். ஊரடங்கு காலத்தில் விமானச் சேவை நிறுத்தப்பட்டதால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்குப் பெருத்த வருவாய் இழப்பும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. பலருக்கு வேலை இழக்கவும் நேரிட்டது. இந்நிலையில் தற்போது விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதால் அத்துறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது.

ALSO READ | பென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News