தாய் யானை இறந்ததால் உடலை விட்டு வர மறுத்த குட்டி யானை

அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் கட்டுமானப்பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து யானை ஒன்று பலியாகியுள்ளது.

Last Updated : Nov 26, 2016, 11:14 AM IST
தாய் யானை இறந்ததால் உடலை விட்டு வர மறுத்த குட்டி யானை title=

சோனித்பூர்: அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் கட்டுமானப்பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து யானை ஒன்று பலியாகியுள்ளது.

சமீபத்தில், இந்த கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தின் வழியாக ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் வந்துள்ளது. அப்போது அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த சுமார் பத்தடி ஆழப் பள்ளத்துக்குள் அந்த யானை தவறி விழுந்தது. தாய் யானையை தொடர்ந்து குட்டி யானையும் பள்ளத்தில் இறங்கி தாய்க்கு உதவிசெய்ய முயற்சித்தது.

ந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பெண் யானையை மீட்ட போராடினர். ஆனால், பலத்த காயம் ஏற்பட்டதால் அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். 

Trending News